சோனி - ஜீ இணைப்பு கைவிடப்படுவதாக வெளியான தகவல் தவறானது: ஜீ என்டர்டெயின்மென்ட் விளக்கம்

By SG Balan  |  First Published Jan 9, 2024, 4:06 PM IST

செப்டம்பர் 2021இல், சோனி மற்றும் ஜீ நிறுவனங்கள் தங்கள் நெட்வொர்க்குகள், டிஜிட்டல் சொத்துகள், உற்பத்தி செயல்பாடுகள் உள்ளிட்டவற்றை ஒன்றிணைக்க முடிவு செய்தன


ஜீ என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் சோனி நிறுவனத்தின் இந்தியப் பிரிவும் இணைக்கப்படுவது தொடர்பான ஒப்பந்தம் ஜனவரி 20ஆம் தேதிக்குள் கைவிடப்படும் என்று வெளியான தகவல் அடிப்படை ஆதாரம் அற்றது என்று ஜீ என்டர்டெயின்மென்ட்  கூறியுள்ளது.

ஒப்பந்த முறிவு தொடர்பான செய்தி உண்மைக்கு மாறானது என்றும் தவறானது என்றும் ஜீ என்டர்டெயின்மென்ட் லிமிடெட் செவ்வாய்க்கிழமை தெளிவுபடுத்தி இருக்கிறது.

Tap to resize

Latest Videos

10 பில்லியன் டாலர் மதிப்பிலான இணைப்பு ஒப்பந்தத்தில் இருந்து சோனி பின்வாங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் சோனி இந்தியா சார்பில் ஜனவரி 20ஆம் தேதிக்கு முன் ஒப்பந்த முறிவு பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்றும் ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் திங்கட்கிழமை செய்தி வெளியிட்டது.

ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலில் 2,40,000 பிளாஸ்டிக் நுண்துகள்கள்! ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!

அந்தச் செய்திக்கு மறுப்பு தெரிவித்து ஜீ என்டர்டெயின்மென்ட் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ப்ளூம்பெர்க் வெளியிட்ட செய்தி, "ஆதாரமற்றது மற்றும் உண்மையற்றது என்பதை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம்" எனக் கூறியிருக்கிறது. சோனியுடன் இணைவதற்கான முடிவில் உறுதியாக இருப்பதாவும் இணைப்பை வெற்றிகரமாக முடிக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 2021இல், சோனி மற்றும் ஜீ நிறுவனங்கள் தங்கள் நெட்வொர்க்குகள், டிஜிட்டல் சொத்துகள், உற்பத்தி செயல்பாடுகள் உள்ளிட்டவற்றை ஒன்றிணைக்க முடிவு செய்தன.

இவ்விரு நிறுவனங்களும் இணையும்போது 70 க்கும் மேற்பட்ட டிவி சேனல்கள், இரண்டு வீடியோ ஸ்ட்ரீமிங் சேவைகள் (ZEE5 மற்றும் Sony LIV) மற்றும் இரண்டு திரைப்பட ஸ்டுடியோக்கள் (Zee ஸ்டுடியோஸ் மற்றும் சோனி பிக்சர்ஸ் ஃபிலிம்ஸ் இந்தியா) ஆகிய ஒரே குடையின் கீழ் வரும். இதன் மூலம் இந்தியாவின் மிகப்பெரிய பொழுதுபோக்கு நெட்வொர்க்காகவும் இருக்கும்.

AI வாய்ஸ் எப்படி இருக்கும்? சைபர் கிரிமினல்களை ஈசியா கண்டுபிடிக்க சில டிப்ஸ்!

click me!