Share market today: சென்செக்ஸ் 700 புள்ளிகள் உயர்வு! பங்குச்சந்தையில் காளை ராஜ்ஜியம்: வங்கி, ஆட்டோபங்கு லாபம்

Published : Mar 30, 2022, 04:03 PM IST
 Share market today: சென்செக்ஸ் 700 புள்ளிகள் உயர்வு! பங்குச்சந்தையில் காளை ராஜ்ஜியம்: வங்கி, ஆட்டோபங்கு லாபம்

சுருக்கம்

 Share market today: மும்பை, தேசியப் பங்குச்சந்தையில் இன்று ஏற்றத்துடன் தொடங்கிய வர்த்தகம் மாலை வரை குறையாமல் உயர்ந்த நிலையிலேயே இருந்து உயர்வுடன் முடிந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மும்பை, தேசியப் பங்குச்சந்தையில் இன்று ஏற்றத்துடன் தொடங்கிய வர்த்தகம் மாலை வரை குறையாமல் உயர்ந்த நிலையிலேயே இருந்து உயர்வுடன் முடிந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

சர்வதேச காரணிகள் சாதகமாக அமைந்திருப்பது, கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவது, குறிப்பாக உக்ரைன் ரஷ்யா இடையே போர் தீவிரம் குறைந்து பேச்சு வார்த்தைக்கு இருதரப்பும் முன்வந்துள்ளது போர் முடிவுக்கு உருவதை உணர்த்தியுள்ளது. கீவ் பகுதியில் முன்னேறிய ரஷ்ய ராணுவத்தினரை திரும்புமாறு ரஷ்யா உத்தரவிட்டதால், பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டு, போர் முடிவுக்கு வரும் சாத்தியங்கள் இருப்பதாகத் தெரிகிறது.

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் முடிவுக்கு வருவது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை அளித்து, மீண்டும் உலக பொருளாதாரம் இயல்புக்கு வரும் என்று நம்பியதால் உற்சாகத்துடன் வர்த்தகத்தில் ஈடுபட்டனர்.

மாலை வர்த்தகம் முடிவில் மும்பைப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 740 புள்ளிகள் வரை உயர்ந்து, 58,683  புள்ளிகளில் வர்த்தகம் முடிந்தது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 146 புள்ளிகள் ஏற்றம் கண்டு  17,472 புள்ளிகளில் ஏற்றத்துடன் முடிந்தது.

மும்பைப் பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கியப் பங்குகளில் 21 பங்குகள் லாபத்தில் முடிந்தன

மும்பைப் பங்குச்சந்தையில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎப்சி டிவின்ஸ், ஐசிஐசிஐ வங்கி, கோடக் மகிந்திரா, பஜாஜ் பைனான்ஸ், பார்தி ஏர்டெல், நெஸ்டிலே, லார்சன் அன்ட் டூப்ரோ, ஹெச்டிஎப்சி, ஏசியன் பெயின்ட்ஸ், மாருதி, ஆக்சிஸ் வங்கி, அல்ட்ராடெக் சிமெண்ட், இன்டஸ்இன்ட் வங்கி ஆகிய பங்குகள் விலை லாபத்துடன் நகர்கின்றன. பஜாஜ் பின்சர்வ், கிராஸிம், டாடா கன்சூமயர், டாடா மோட்டார்ஸ், ஹீரோ மோட்டார்ஸ் ஆக்சிஸ்வங்கி ஆகியவை பங்குகள் தேசியப்பங்குச்சந்தையி்ல் லாபமடைந்தன

டாடா ஸ்டீல், டெக்மகிந்திரா, சன்ஃபார்மா, என்டிபிசி,ஓஎன்ஜிசி, ஹின்டால்கோ, ஜேஎஸ்டபிள்யு ஸ்டீல், ஐஓசி, டெக்மகிந்திரா, ஐடிசி ஆகிய பங்குகள் சரிவில் உள்ளன. நிப்டியில் உலோகம், மருந்துத்துறை மட்டும் சரிவில் முடிந்தன. மற்ற துறைகளான ரியல்எஸ்டேட், ஆட்டோமொபைல், பொதுத்துறை வங்கிகள், ஊடகம் ஆகிய துறைகள் லாபத்துடன் முடிந்தன


 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

தங்க கடனில் புதிய விதிகள்.. ஆர்பிஐயின் அதிரடி மாற்றம்.. மக்களே நோட் பண்ணுங்க
அரசு ஊழியர்கள் வயிற்றில் பாலை வார்த்த மத்திய அரசு.. 1 கோடி குடும்பங்கள் நிம்மதி.!