share market today: முதலீட்டாளர்களுக்கு ஷாக்: வீழ்ச்சியில் பங்குச்சந்தை: சென்செக்ஸ் சரிவு ஐசிஐசிஐ அபாரம்

Published : Apr 25, 2022, 10:04 AM IST
share market today: முதலீட்டாளர்களுக்கு ஷாக்: வீழ்ச்சியில் பங்குச்சந்தை: சென்செக்ஸ் சரிவு ஐசிஐசிஐ அபாரம்

சுருக்கம்

share market today :வாரத்தின் முதல்நாளான இன்று மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன, சர்வதேச காரணிகள், அமெரிக்க பெடரல் வங்கியின் அறிவிப்பு பங்குச்சந்தையில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

வாரத்தின் முதல்நாளான இன்று மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன, சர்வதேச காரணிகள், அமெரிக்க பெடரல் வங்கியின் அறிவிப்பு பங்குச்சந்தையில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

பெடரல் வங்கி

அமெரி்க்காவில் வரலாறு காணாத வகையில் பணவீக்கம் உயர்ந்திருப்பதால்,  அதைக் கட்டுப்படுத்த இந்த நிதியாண்டில் வட்டிவீதம் எதிர்பார்த்திராத அளவு உயர்த்தப்படும் என்று பெடரல் வங்கியின் தலைவர் ஜெரோம் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு, உலகளவில் பல்வேறு நாடுகளின் பங்குச்சந்தையிலும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.

கடந்த வாரத்திலும் மும்பை, தேசியப் பங்குச்சந்தைசரிவுக்கு முக்கியக் காரணங்களில் ஒன்றாக அமெரிக்க பெடரல் வங்கியின் அறிவிப்பு இருந்தது. மே மாதம் வட்டிவீதம் உயர்த்த வாய்ப்பிருப்பதால் முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய தயங்கி ,லாபநோக்கத்தோடு பங்குகளை விற்க முயன்றனர்.

சரிவு தொடர்கிறது

இதனால் வர்த்தகம்தொடங்குவதற்கு முன்பே பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 700 புள்ளிகள் சரிந்தது. ஆனால், இந்த சரிவு வர்த்தகம் தொடங்கியபின் குறைந்தது. மும்பைப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 550 புள்ளிகள் சரிந்து, 56,646 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 177 புள்ளிகள் குறைந்து, 16,944 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது.

இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி கடந்த நிதியாண்டில் இரு மடங்கு அதிகரித்து 11900 கோடி டாலராக அதிகரித்துள்ளது என்று பெட்ரோலியம் திட்டமிடல் மற்றும் ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது. இது கடந்த 2020-21 நிதியாண்டைவிட 6202 கோடி டாலர் அதிகமாகும். ரஷ்யா உக்ரைன் போர் நடந்தது கடைசி பிப்ரவரி முதல் மார்ச் வரை மட்டும்தான்.இரு மாதங்களுக்கே இந்த பாதிப்பு எனும்பட்சதில் நடப்பு நிதியாண்டில் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு பன்மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது

வீழ்ச்சி

30 முக்கிய நிறுவனங்களைக் கொண்ட மும்பைப் பங்குச்சந்தையில் ஐசிஐசிஐ வங்கி, பவர்கிரிட், என்டிபிசி, மகிந்திரா அன்ட் மகிந்திரா ஆகிய நிறுவனப் பங்குகள் மட்டுமே லாபத்தில் செல்கின்றன, மற்ற நிறுவனப் பங்குகள் அனைத்தும் சரிவில் உள்ளன. 737 பங்குகள் மதிப்பு உயர்ந்துள்ளது, 1553 பங்குகள்மதிப்பு சரிந்துள்ளது,127 பங்குகள் மதிப்பு மாறாநிலையில் உள்ளது.

நிப்டியில் பிரிட்டானியா இன்டஸ்ட்ரீஸ், அப்பலோ மருத்துவமனை, இந்துஸ்தான் யூனிலீவர், பிபிசிஎல், இன்டஸ்இன்ட் வங்கி ஆகிய பங்குகள் மதிப்பு சரி்ந்துள்ளனநிப்டியில் அனைத்து துறைப்பங்குகளும் சரிவில் உள்ளன. குறிப்பாக வங்கித்துறை, எப்எம்சிஜி, தகவல்தொழில்நுட்பம், உலோகம், பொதுத்துறை வங்கி, ரியல்எஸ்டேட் பங்குகள் மதிப்பு ஒரு சதவீதத்துக்கும் அதிகமாகச் சரிந்துள்ளது.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

அரசு ஊழியர்கள் வயிற்றில் பாலை வார்த்த மத்திய அரசு.. 1 கோடி குடும்பங்கள் நிம்மதி.!
அனில் அம்பானிக்கு அதிர்ச்சி.! அமலாக்கத்துறை எடுத்த அஸ்திரம்.. இடியாப்ப சிக்கலில் ரிலையன்ஸ் பவர்