Share market today:முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை; உயர்வுடன் முடிந்த மும்பை பங்குச்சந்தை

By Pothy RajFirst Published Feb 28, 2022, 3:41 PM IST
Highlights

ரஷ்யா-உக்ரைன் இடை பேச்சுநடக்கும் என்று செய்திவெளியானதையடுத்தும், கச்சா எண்ணெய் விலை,  நம்பிக்கையளித்த உலோகப்பங்குகள் ஆகியவற்றால் மும்பை, தேசியப்பங்குசந்தைகளில் இன்று காலை சரிவுடன் வர்த்தகம் தொடங்கி உயர்வுடன் முடித்தது.

ரஷ்யா-உக்ரைன் இடை பேச்சுநடக்கும் என்று செய்திவெளியானதையடுத்தும், கச்சா எண்ணெய் விலை,  நம்பிக்கையளித்த உலோகப்பங்குகள் ஆகியவற்றால் மும்பை, தேசியப்பங்குசந்தைகளில் இன்று காலை சரிவுடன் வர்த்தகம் தொடங்கி உயர்வுடன் முடித்தது.

உக்ரைன்-ரஷ்யா இடையே நடந்துவரும் போரில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டதும், ஆசியப் பங்குசந்தைகள் ஏற்றத்துடன் முடிந்தது, உள்நாட்டில் உலோகப் பங்குகள் நல்ல விலைக்கு கைமாறியது போன்றவற்றை முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையளித்து.

கடந்த 7 நாட்களாக சந்தையில் இழப்பு தொடர்ந்தநிலையில் வெள்ளிக்கிழமை மாலை முதலீட்டாளர்கள் பங்குகள் ஆர்வத்துடன் வாங்கியதால்,  பங்குச்சந்தையில் வர்த்தகம் ஏற்றத்துடன் இருந்தது. 

அதே நம்பிக்கையுடன் இன்று காலை வர்த்தகம் தொடங்கியது. ஆனால், ரஷ்யா மீது அமெரி்க்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் விதித்துள்ள புதிய தடைகள், ரஷ்ய வங்கிகளுக்கு விதித்த தடைகள்போன்றவை போரைத் தீவிரப்படுத்தும் என்று முதலீட்டாளர்கள் நம்பினர். இதையடுத்து, இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் 500 புள்ளிகள் சரிந்தது. விரைவில் மீண்டுவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்சென்க்ஸபுள்ளிகள் 700புள்ளிகள் சரிந்தது.தேசியப்பங்குச்சந்தையான நிப்டியில் 177 புள்ளிகள் குறைந்தது

ஆனால், பிற்பகலுக்குபின் பங்குசந்தையில் நிலைமை மாறியது. ரஷ்யா-உக்ரைன் இடையே பேச்சுவார்த்தை தொடங்கும் என்ற செய்தி முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையளித்தது. இதனால், பிற்பகலுக்குப்பின் பங்குகளை உற்சமாக முதலீட்டாளர்கள் துணிந்து வாங்கினார் புள்ளிகள் உயரத் தொடங்கியது

மும்பைபங்குச்சந்தையில் இன்று மாலை வர்த்தகம் முடிவில் சென்செக்ஸ் 388 புள்ளிகள் உயர்ந்து, 56,247 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 56,324 புள்ளிகள்வரை சென்றது. தேசியப்பங்குச்சந்தையில் நிப்டி 129 புள்ளிகள் அதிகரித்து, 16,787 புள்ளிகளில் ஏற்றத்துடன் முடிந்தது.

மும்பை பங்குச்சந்தையில், தகவல்தொழில்நுட்பம், எண்ணெய்எரிவாயு, எரிசக்தி, பொதுத்துறை வங்கிகள், உலோகத்துறை பங்குகள் உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு கை கொடுத்தன. குறிப்பாக உலோகத்துறை பங்குகள் 4.5% உயர்ந்தன. 

டாடா ஸ்டீல், பவர்கிரிட் பங்குகள் மட்டுமே ஓரளவு லாபமீட்டி வருகின்றன. பார்தி ஏர்டெல், ஹெச்டிஎப்சி வங்கி, டாக்டர் ரெட்டீஸ், ஏசியன் பெயின்ட்ஸ், மாருதி, மகிந்திரா அன்ட் மகிந்திரா, பஜாஜ் பின்சர்வ், கோடக் வங்கி, ஆக்சிஸ் வங்கி ஆகியவற்றின் பங்குகள் சரிவில் முடிந்தன. 

click me!