
பங்குச்சந்தை ஒழுங்கமைப்பான செபியின் தலைவராக நிதித்துறையில் 30 ஆண்டுகள் அனுபவம் கொண்ட மாதவி புரி பாக் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அடுத்த 3 ஆண்டுகளுக்கு தலைவராக இருப்பார்.
செபியின் தலைவராக இருக்கும் யு.கே.சின்ஹா கடந்த 2017ம் ஆண்டு, மார்ச் 1-ம் தேதி நியமிக்கப்பட்டார். அஜய் தியாகிக்கு கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி 2020-லேயே பணிக் காலம் முடிந்துவிட்டது. ஆனால் கொரோனா வைரஸ் போன்ற பல்வேறு காரணங்களால் அஜய் தியாகிக்கு முதலில் 6 மாதமும், பின்னர் 18 மாதங்களும் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இதன்படி கடந்த 2020, செப்டம்பர் முதல் 2022, பிப்ரவரி வரை சின்ஹாவுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டிருந்தது.
சின்ஹாவின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைய இருந்ததையடுத்து, செபி அமைப்புக்கு புதிய தலைவராக, மாதவி புரி பக் நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த 3 ஆண்டுகளுக்கு இந்தப் பதவியில் மாதவி இருப்பார்
செபி அமைப்புக்குத் தலைவருக்கு முதன்முதலில் பெண் ஒருவர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். செபி அமைப்பில் நிர்வாகக்குழுவில் முழுநேர உறுப்பினராக கடந்த 2017 ஏப்ரல் முதல் 2021 அக்டோபர் வரை மாதவி இருந்தவர். செபியின் சார்பில் புதிய தொழில்நுட்பக் குழு அமைக்கப்பட்டபோது, அதை வழிநடத்தியதும் மாதவி புரிதான். மாதவி தனது பதவிக்காலத்தில் போர்ட்போலியா, முதலீட்டுத் திட்டங்கள், கண்காணிப்பு ஆகியப் பணிகளைச் செய்தார்.
செபிக்கு மட்டுமல்ல தனியார் துறைக்கும் முதன்முதலில் நியமிக்கப்பட்ட பெண் அதிகாரி மாதவி புரிதான். ஐசிஐசிஐ வங்கியில்தான் தனது பணிக்காலத்தை மாதவி தொடங்கினார். கடந்த 1989ம் ஆண்டு ஐசிஐசிஐ வங்கியில் தனது பணியை மாதவி தொடங்கினார், கார்ப்பரேட் பைனான்ஸ், பிராண்டிங், நிதிப்பிரிவு, கடன் பிரிவு ஆகியவற்றில் பணியாற்றினார். கடந்த 2009 முதல் 2011 வரை ஐசிஐசிஐவங்கி செக்யூரிட்டிஸ் பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார். 2011ம் ஆண்டு சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் சென்று கிரேட்டர் பசிபிக் கேபிடல் பிரிவில் மாதவி பணியாற்றினார்.
சீனாவின் ஷாங்காயில் உள்ள பிரிக்ஸ் அமைப்புஉருவாக்கிய நியூ டெவ்லப்மென்ட் வங்கியில் ஆலோசகராகவும் மாதவி பணியாற்றி வருகிறார். அகமதாபாத்தில் உள்ள ஐஐஎம் உயர்கல்வி நிறுவனத்தில் எம்.பி.ஏ. முடித்த மாதவி, இளங்கலைபட்டப்படிப்பை, டெல்லியில் உள்ள செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியில் படித்தார். ஐசிஐசிஐ செக்யூரிட்டிஸ் நிறுவனத்தில் பணியைத் தொடங்கும் முன், தனியார் தொண்டுநிறுவனத்தில் மாதவி பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாதவி தவிர, உத்தரப்பிரததேசத்தின் 1987ம் ஆண்டு ஐஏஎஸ் கேடர் அதிகாரியான டெபாஷிஸ் பாண்டா, குஜராத் கேடரைச் சேர்ந்த அனில் முகிம் ஆகியோரும் செபி தலைவர் பதவிக்கு ஆலோசிக்கப்பட்டனர்.
மத்திய நிதிஅமைச்சகத்தில் மூத்த அதிகாரியாக பாண்டா இருந்து, கடந்தஜனவரியில் ஓய்வு பெற்றார். அனில் முகிம் கடந்த ஆண்டு ஆகஸ்டில் ஓய்வுபெற்றார். இருப்பினும் குஜராத்தில் மோடி முதல்வராக இருந்தபோது அவருக்கு நெருக்கமாக பணியாற்றியிருந்தார். பிரதமராக மோடி வந்தபின், குஜராத்திலிருந்து அனில் முகிம் மத்திய பணிக்கு அழைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.