
பாகிஸ்தான் மீது இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தி இருக்கும் நிலையில், நிஃப்டி 24,369.70 ஆகவும், சென்செக்ஸ் 80,591.72 புள்ளிகளாகவும் வர்த்தம் செய்தி வருகிறது.
India’s Operation Sindoor: பாகிஸ்தானில் ஒன்பது பயங்கரவாத இலக்குகள் மீது இந்தியாவின் முப்படைகள் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தின. பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று 26 பேரைக் கொன்ற பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு முழுவதும் கடுமையான ஷெல் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
Civil mock drill in India: போர் நிலைமையில் மக்களின் பாதுகாப்பை மதிப்பிடுவதற்காக மே 07 அன்று போர் உத்திகையை நடத்துமாறு இந்திய அரசு மாநிலங்களைக் கேட்டுக் கொண்டது. நாட்டின் 244 வகைப்படுத்தப்பட்ட சிவில் பாதுகாப்பு மாவட்டங்களில் சிவில் பாதுகாப்புப் பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு செய்ய முடிவு செய்துள்ளது.
தங்கம், பத்திரங்கள், டாலரில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள்
முந்தைய வர்த்தகத்தில், பிஎஸ்இ சென்செக்ஸ் கடுமையாக சரிந்தது. ஆனால் இன்றைய வர்த்தகம் துவங்கியதும் விரைவாக மீண்டும் சரி செய்து கொண்டது. காலை 9:45 மணியளவில், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இரண்டும் பச்சை நிறத்தில் இருந்தன. ராணுவ நடவடிக்கைகள் அதிகரிக்கும் என்ற அச்சத்தில் முதலீட்டாளர்கள் பங்குகளிலிருந்து தங்கம், பத்திரங்கள் அல்லது டாலர் போன்ற பாதுகாப்பான முதலீட்டை நோக்கி நகர்கிறார்கள். இதனால் நிச்சயமற்ற பொருளாதாரம் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
சந்தைகள் நிலையற்றதாக இருந்தபோதிலும், லாபங்களுக்கும் இழப்புகளுக்கும் இடையில் ஊசலாடினாலும், காலை 10 மணி வரை பெரிய சரிவு எதுவும் ஏற்படவில்லை. 'ஆபரேஷன் சிந்தூர்'க்குப் பிறகு தலால் ஸ்ட்ரீட் நிலையாக இருந்ததற்கான காரணங்கள் என்ன என்று பார்க்கலாம்.
ஆபரேஷன் சிந்தூரைப் பொறுத்த வரை, இந்த துல்லியமான தாக்குதல்களுக்கு எதிரி எவ்வாறு எதிர்வினையாற்றுகிறார் என்பதை நாம் காத்திருந்து பார்க்க வேண்டும். இந்தியாவின் பதிலடி தாக்குதல் சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
வர்த்தகம் எந்த பாதிப்புக்கும் உள்ளாகாமல் இருப்பதற்கான காரணமே வெளிநாட்டு முதலீடுகள் தான். இது கடந்த 14 வர்த்தக அமர்வுகளில் ரூ.43,940 கோடி வரை முதலாக சேர்ந்துள்ளது. உலகளாவிய சந்தை, மதிப்பு குறைந்து வரும் டாலர், குறைவான பொருளாதார வளர்ச்சியை கொண்டு இருக்கும் அமெரிக்கா, சீனா ஆகியவற்றில் FII கவனம் செலுத்துகிறது.
ராணுவ விரிவாக்கத்திற்கான சாத்தியம், உலகளாவிய கட்டண முன்னேற்றங்கள் மற்றும் மே 7 அன்று வரவிருக்கும் அமெரிக்க பெடரல் ரிசர்வ் கொள்கை முடிவு ஆகியவையும் சந்தையின் மீது எந்தளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
வர்த்தகர்கள் 24,500 – 24,550 புள்ளி அளவில் நிஃப்டியையும் 54,600 - 54,900 க்கு அருகில் பேங்க் நிஃப்டியையும் விற்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பிஎஸ்இ சென்செக்ஸில் உள்ள 30 பங்குகளில் 11 பங்குகள் உயர்ந்து வர்த்தகமாகின. டாடா மோட்டார்ஸ், பவர் கிரிட் கார்ப், டைட்டன், பஜாஜ் ஃபைனான்ஸ் மற்றும் எஸ்பிஐ ஆகியவை உயர்ந்து வர்த்தகமாகின. மேலும் ஆசிய பெயிண்ட், இண்டஸ்இண்ட் வங்கி, சன் பார்மா, நெஸ்லே இந்தியா மற்றும் டிசிஎஸ் ஆகியவை அதிக இழப்பை சந்தித்தன.
துறைசார் குறியீடுகளில், நிஃப்டி ஆட்டோ, வங்கி, எரிசக்தி, நிதி சேவைகள், உலோகம், ரியல் எஸ்டேட் ஆகியவை சிவப்பு நிறத்தில் வர்த்தகம் செய்யதன. அதே நேரத்தில் FMCG, IT, மருந்து, நுகர்வோர் சாதனங்கள் மற்றும் எண்ணெய் & எரிவாயு ஆகியவை சிவப்பு நிறத்தில் வர்த்தகம் செய்தன.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.