
இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானதால் பிரிட்டனுக்கும், இந்தியாவுக்கும் பெரியளவில் பொருளாதார வெற்றி கிடைத்துள்ளது.
இந்தியா, பிரிட்டன் இடையே இன்று வர்த்தக ஒப்பந்தம் மூன்று ஆண்டுகளுக்குப் பின் கையெழுத்தாகி இருக்கிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் விஸ்கி, அழகுசாதனப் பொருட்கள் மற்றும் மருத்துவ சாதனங்கள் போன்றவற்றின் மீதான இந்திய வரிகளைக் குறைக்கும். பிரிட்டன் ஏற்றுமதிகளுக்கான 90% கட்டண வரிகளில் குறைப்புகளை ஏற்படுத்தும். இதன் மூலம் பிரிட்டனில் நல்ல தொழில் வாய்ப்பு பெருகும்.
இந்திய வரிகள் குறைப்பு:
இந்திய வரிகள் குறைக்கப்படும். 90% கட்டண வரிகளில் குறைப்புகளை ஏற்படுத்தும். இவற்றில் 85% பத்தாண்டிற்குள் முழுமையாக கட்டணமில்லாத வரியாக மாறும். ஒப்பந்தத்தின் பத்தாம் ஆண்டுக்குள் விஸ்கி மற்றும் ஜின் கட்டணங்கள் 150% லிருந்து 75% ஆக பாதியாகக் குறைக்கப்பட்டு 40% ஆகக் குறைக்கப்படும். அதே நேரத்தில் வாகன கட்டணங்கள் ஒதுக்கீட்டின் கீழ் 100% க்கும் அதிகமாக இருந்து 10% ஆகக் குறைக்கப்படும். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் சுங்கக் கட்டண நடவடிக்கைகள் காரணமாக ஏற்பட்ட குழப்பம், இந்த இரண்டு நாடுகளையும் விரைவாக ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.
உலகின் ஐந்தாவது மற்றும் ஆறாவது பெரிய பொருளாதாரங்களான பிரிட்டன் மற்றும் இந்தியாவுக்கு இடையிலான இந்த ஒப்பந்தம், மூன்று ஆண்டுகள் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இன்று முடிவுக்கு வந்தது. இந்த ஒப்பந்தம் இது 2040ம் ஆண்டுக்குள் இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தை கூடுதலாக 34 பில்லியன் டாலர் அளவிற்கு உயர்த்தற்கு இலக்கை நிர்ணயித்துள்ளது.
இந்தியா மற்றும் பிரிட்டனுக்கிடையிலான புதிய வர்த்தக ஒப்பந்தம் மூலம் பிரிட்டன் முக்கியமான பல லாபங்களை பெற்றுள்ளது. முக்கிய தகவல்கள்:
விலை வரி குறைப்புகள்:
ஸ்காட்ச் விஸ்கி: வரிகள் 150% இலிருந்து 75% ஆக குறைக்கப்படும்.
கார்கள்: வரிகள் 100% இலிருந்து 10% ஆக குறைக்கப்படும்.
மற்ற பொருட்கள்: ஜின், மருத்துவ உபகரணங்கள், மேம்பட்ட இயந்திரங்கள் மற்றும் ஆடு மாமிசம் ஆகியவற்றுக்கும் வரி சலுகைகள் வழங்கப்படும்.
இந்தியா, பிரிட்டன் வர்த்தக ஒப்பந்தம் - பொருளாதார தாக்கம்:
இந்த வரி குறைப்புகள் 2022 வர்த்தக தரவுகளின்படி 400 மில்லியன் பவுண்ட்டுகள் மதிப்புடையவை. இது பத்து ஆண்டுகளில் 900 மில்லியன் பவுண்ட்டுகளாக இரட்டிப்பாகும் என UK வணிகத்துறை கணிக்கிறது.
X தளத்தில் பிரதமரின் மோடியின் கருத்து:
இங்கிலாந்து பிரதமர் கியர் ஸ்டார்மருடன் இன்று நான் பேசியது மிகுந்த மகிழ்ச்சியான ஒரு நிகழ்வாகும். இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளோம் – இரு நாடுகளுக்கும் பயனளிக்கும், தீவிரமான ஒரு வர்த்தக ஒப்பந்தம் மற்றும் இரட்டை வரிவிதிப்பு ஒப்பந்தம் (Double Contribution Convention) வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளன. இந்தவரலாற்று ஒப்பந்தங்கள், நமது விரிவான துறைகளில் உள்ள மூன்றாண்டுக் கூட்டுறவைக் மேலும் வலுப்படுத்தும். இவை இரு நாடுகளிலும் வர்த்தகம், முதலீடு, வளர்ச்சி, வேலை வாய்ப்புகள் மற்றும் புதுமைகளை ஊக்குவிக்கும். பிரதமர் ஸ்டார்மரை விரைவில் இந்தியாவுக்கு வரவேற்க காத்திருக்கிறேன்'' என்று பதிவிட்டுள்ளார்.
தொலைபேசி அழைப்பில் மோடி, கியர் ஸ்டார்மர்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இங்கிலாந்து பிரதமர் கியர் ஸ்டார்மர் ஆகியோர் இடையிலான “மிகவும் நட்பான” தொலைபேசி அழைப்பின் பின்னர் இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. இது இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் முன் சட்ட பரிசீலனைக் கட்டங்களை கடந்து செல்லும்.
இங்கிலாந்து பிரதமர் கியர் ஸ்டார்மர் X தள பதிவு:
''இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையே புரட்சிகரமான வர்த்தக ஒப்பந்தம் இணக்கப்பட்டிருக்கிறது. இது இரு நாடுகளிலும் மக்களுக்கு மற்றும் தொழில்களுக்கு நன்மை பயக்கும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
போரிஸ் ஜான்சன் கால துவக்கம்:
இந்த ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தைகள் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் காலத்தில் தொடங்கியவை. 2022 அக்டோபருக்குள் முடிக்க திட்டமிடப்பட்டிருந்தாலும், சிக்கலான வரி விவகாரங்கள் மற்றும் இங்கிலாந்தில் அரசியல் நிலைமை மாற்றங்கள் காரணமாக தாமதம் ஏற்பட்டது.
பிரிட்டன் பயணம் பியூஸ் கோயல்:
இந்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் சமீபத்தில் இரு முறை இங்கிலாந்துக்குச் சென்று, பிரிட்டன் வர்த்தக அமைச்சர் ஜோனத்தன் ரெனால்ட்ஸ் உடன் முக்கிய சந்திப்புகளை நடத்தினார். இந்த முயற்சிகளால் ஒப்பந்தம் இறுதி அடைந்தது.
இந்தியாவுக்கான முக்கிய வெற்றிகள்:
இந்திய மற்றும் பிரிட்டிஷ் தொழிலாளர்கள் இரு நாடுகளிலும் சம காலத்தில் சமூகக் கட்டணங்களை செலுத்த வேண்டிய அவசியம் இல்லாமல் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் இரு நாடுகளுக்கும் இடையே சுலபமாக பயணிக்க புதிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்படும்.
புதிய விசா வகைகள்: இந்தியச் சமையல்காரர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் யோகா பயிற்சியாளர்களுக்கான விசா வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்தியாவுக்கு பிரிட்டனில் வேலை வாய்ப்பு:
இந்தியாவுக்கும், இங்கிலாந்துக்கும் இடையே ஏற்கனவே வலுவான வர்த்தக உறவை இந்த FTA கணிசமாக மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய இருதரப்பு வர்த்தகம் ஆண்டுக்கு 41 பில்லியன் பவுண்டுகளாக உள்ளது, மேலும் புதிய ஒப்பந்தம் இதை கூடுதலாக 25.5 பில்லியன் பவுண்டுகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
FTA ( Free trade Agreement) நீண்ட காலத்திற்கு பிரிட்டிஷ் தொழிலாளர்களுக்கு 2.2 பில்லியன் பவுண்டுகள் கூடுதல் வருடாந்திர ஊதியத்தை கொடுக்கும் என்று UK அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.
"FTA மிகவும் சிக்கலானவை. மேலும் இது உண்மையிலேயே இரு நாடுகளுக்கும் சிறப்பாக சேவை செய்யும் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும். இந்த ஒப்பந்தம் UK-இந்தியா உறவுகளில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை பிரதிபலிக்கிறது. இது எங்கள் கூட்டாண்மையின் திறனையும், வரவிருக்கும் வாய்ப்புகளையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது," என்று UK-வை தளமாகக் கொண்ட கொள்கை தளமான India Global Forum (IGF) நிறுவனர் மற்றும் தலைவர் மனோஜ் லட்வா PTI செய்தியில் கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.