இந்திய பங்குச்சந்தை அதிரடி உயர்வு..! அதானி, ரிலையன்ஸ் குரூப் தான் நம்பர் 1 ..!

By ezhil mozhiFirst Published May 23, 2019, 11:13 AM IST
Highlights

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து பாஜகவே முன்னிலையில் இருப்பதால் பங்குசந்தையும் உயர்ந்து காணப்படுகின்றன. மொத்தமுள்ள 542 தொகுதிகளில் பாஜக 320க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தற்போது வரை முன்னிலை வகித்து வருகிறது.

இந்திய பங்குச்சந்தை அதிரடி  உயர்வு..! அதானி, ரிலையன்ஸ் குரூப் தான் நம்பர் 1 ..!

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து பாஜகவே முன்னிலையில் இருப்பதால் பங்குசந்தையும் உயர்ந்து காணப்படுகின்றன. மொத்தமுள்ள 542 தொகுதிகளில் பாஜக 320க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தற்போது வரை முன்னிலை வகித்து வருகிறது.

இதன் காரணமாக தேசிய பங்கு சந்தை மற்றும் மும்பை பங்குச்சந்தை  முன்னேற்றம் அடைந்துள்ளது. அதன்படி மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் 700 புள்ளிகள் அதிகரித்து உள்ளது. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 200 புள்ளிகள் அதிகரித்து பங்கு வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு 19 ஆம் தேதி வெளியான போதே அன்றைய தினத்தில் 1,400 புள்ளிகள் அதிகரித்து அன்றைய பங்கு வர்த்தகம் முடிவு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் இன்று காலை முதலே தொடர்ந்து பாஜக முன்னிலை வகித்து வருவதால், முதலீட்டாளர்களின் ஆர்வம் அதிக அளவில் இருக்கிறது. இதன் காரணமாக தொடர்ந்து புள்ளிவிவரம் அதிகரித்து வருகிறது. அதன்படி அதானி பவர், அதானி  எரிவாயு என அதானி குழுமம் அனைத்தும் அதிக லாபத்தை ஈட்டக்கூடிய பங்குகளாக இன்று உள்ளது.

அதேபோன்று ரிலையன்ஸ் குடும்ப நிறுவனங்களான ரிலையன்ஸ் பவர் ரிலையன்ஸ் கேப்பிட்டல், ரிலையன்ஸ், உள்கட்டமைப்பு ரிலையன்ஸ், கம்யூனிகேஷன் உள்ளிட்ட ரிலையன்ஸ் குரூப் அதிக லாபத்தை ஈட்ட கூடியதாக உள்ளது. எனவே ரிலையன்ஸ் மற்றும் அதானி குரூப் பங்குகளில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காண்பித்து வருகின்றனர். இன்று மாலைக்குள் இன்றைய பங்கு சந்தை கிடுகிடுவென உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது

click me!