
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு ஃபியூச்சர் டிரேடிங் பிரிவு வர்த்தகத்தில் பங்கேற்க ஓராண்டுக்கு அதிரடியாக தடை விதித்துள்ளது செபி.
பங்கு வர்த்தகத்தில் நடைபெறும் மோசடிகளை தீவிரமாகக் கண்காணித்து ஒழுங்குபடுத்தி வருகிறது செபி.இந்நிலையில் முறைகேட்டில் ஈடுபட்டதாக சுமார் 12 நிறுவனங்களுக்கு செபி தடை விதித்துள்ளது.
இந்நிலையில், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் மற்றும் அதன் துணை நிறுவனமான ரிலையன்ஸ் பெட்ரோலியம் உள்ளிட்ட 12 நிறுவனங்கள், முறைகேடாக தங்கள் நிறுவனத்தில் முதலீட்டை ஈர்த்துள்ளதாக கண்டுபிடித்த செபி இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும் கூடுதலாக அபராதத்தையும் விதித்துள்ளது
இதன் காரணமாக, ஃபியூச்சர் டிரேடிங் பிரிவில் பங்கேற்க ஓராண்டுக்கு தடை வித்துள்ளது.முறைகேடு செய்ததற்காக, அபராத தொகையாக ரூ.447.27 கோடி இழப்பீடு செலுத்தவும் செபி அதிரடியாக தெரிவித்துள்ளது .
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.