
SBI hikes recurring deposit interest rates: நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ , ரெக்கரிங் டெபாசிட்களுக்கான வட்டியை உயர்த்தியுள்ளது. இந்த வட்டி உயர்வு கடந்த 14ம் தேதி முதல் அமலுக்குவந்துள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் உயர்ந்த பணவீக்க நிலையைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி, வட்டிவீதத்தை கடந்த மே மாதம் 40 புள்ளிகள் உயர்த்தியது. அதன்பின் இந்த மாதத்தில் 50 புள்ளிகள் உயர்த்தியது. கடந்த 2 மாதங்களில் வட்டிவீதம் 90 புள்ளிகள் உயர்ந்துள்ளன. ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட் வீதத்தை உயர்த்தியதைத் தொடர்ந்து, பிற வங்கிகளும் டெபாசிட்களுக்கான வட்டியையும், கடனுக்கான வட்டியையும் உயர்த்தி வருகின்றன.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி, எம்சிஎல்ஆர் வீதத்தை 20 புள்ளிகள் உயர்த்தியுள்ளது. ஒரு மாதம் மற்றும் 3 மாதங்களுக்கான எம்சிஎல்ஆர் 6.85 சதவீதத்திலிருந்து 7.05 சதவீதமாக அதிகரித்துள்ளது. 6 மாதங்களுக்கான எம்சிஎல்ஆர் 7.35%, ஓர் ஆண்டுக்கான எம்சிஎல்ஆ 7.40%, 2 ஆண்டுகளுக்கு 7.60%, 3 ஆண்டுகளுக்கு 7.70% சதவீதமாக உயர்ந்துள்ளது.
இதற்கிடையே வைப்பு நிதிக்கான வட்டிவீதத்தை எஸ்பிஐ வங்கி 15 முதல் 20 புள்ளிகள் வரை உயர்த்தியுள்ளது, இது கடந்த 14ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. பெரிய டெபாசிட்களுக்கான வட்டியையும் 50 முதல் 75 புள்ளிகள் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
| டெபாசிட் காலம் | வட்டி வீதம் |
| 1-2 ஆண்டுகள் | 5.3 % வட்டி |
| 2-3 ஆண்டுகள் | 5.35 % வட்டி |
| 3-5 ஆண்டுகள் | 5.45 % வட்டி |
| 5-10 ஆண்டுகள் | 5.5 % வட்டி |
இந்நிலையில் ரெக்கரிங் டெபாசிட்களுக்கான வட்டியையும் எஸ்பிஐ வங்கி உயர்த்தியுள்ளது. 12 மாதங்கள் முதல் 10 ஆண்டுகள் வரை ரெக்கரிங் டெபாசிட் வைப்பவர்களுக்கு வட்டி 5.3 சதவீதம் முதல் 5.5சதவீதம் வரை வழங்கப்படுகிறது.மூத்த குடிமக்களுக்கு வட்டிவீதம் கூடுதலாக 50 புள்ளிகள் தரப்படுகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.