SBI வாடிக்கையாளர்களே! அக்கவுண்டில் பணம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளதா? இதுதான் காரணம்!

By Rayar r  |  First Published Jan 20, 2025, 7:38 PM IST

எஸ்பிஐ ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட கட்டணத்தை வாடிக்கையாளர்களின் அக்கவுண்ட்டில் இருந்து வசூலிக்கிறது. ஏன் வசூலிக்கிறது? என இந்த செய்தியில் பார்க்கலாம்.


பாரத ஸ்டேட் வங்கி 

SBI எனப்படும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா நாட்டின் மிகப்பெரிய வங்கியாக திகழ்ந்து வருகிறது. எஸ்பிஐ சுமார் 50 கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. மற்ற வங்கிகளை போலவே எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கும் ATM கார்டுகள் எனப்படும் டெபிட் கார்டுகளை வழங்கி வருகிறது. வாடிக்கையாளர்கள் ஏடிஎம்களில் இருந்து பணத்தை எடுக்கவும், ஷாப்பிங் செய்வதற்கு ஆன்லைனில் பணம் செலுத்தவும் உதவுகிறது. 

Latest Videos

ஆனால் இந்த டெபிட் கார்டுகளுக்கு ஆண்டுதோறும் கட்டணம் வசூலிக்கப்படும் என்பது உங்களுக்கு தெரியுமா? உங்கள் எஸ்பிஐ பாஸ்புக்கை நீங்கள் எப்போதாவது நுணுக்கமாகச் சரிபார்த்திருக்கிறீர்களா? உங்கள் பாஸ்புக்கில் உள்ள பதிவுகளைச் சரிபார்க்கும்போது எந்த ஒரு பண பரிவர்த்தனையும் செய்யாமல் உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.236 எடுக்கப்பட்டுள்ளதை அல்லது பிடித்தம் செய்யப்பட்டுள்ளதை பார்க்கலாம். 

பணம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளதா?

நீங்கள் பயன்படுத்தி வரும் டிஎம் கார்டுக்கான வருடாந்திர பராமரிப்பு சேவை கட்டணத்தின் கீழ் உங்கள் வங்கி கணக்கிலிருந்து எஸ்பிஐ பணம் எடுத்துக் கொள்கிறது. எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு டெபிட் கார்டுகளை வழங்குகிறது. அவற்றில் பெரும்பாலானவை கிளாசிக், சில்வர், குளோபல் அல்லது காண்டாக்ட்லெஸ் கார்டுகள். இந்த கார்டுகளுக்கு வங்கி ஆண்டு பராமரிப்பு கட்டணமாக ரூ.200 வசூலிக்கிறது.

ஏடிஎம் சேவை கட்டணம்

​​ஏஎம்சி எனப்படும் ஏடிஎம் சேவை கட்டணம் ரூ.200 என்றால், எஸ்பிஐ ஏன் எனது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.236 கழித்தது? என நீங்கள் கேட்கலாம். ஏனென்றால், வங்கியால் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு மத்திய அரசு 18% ஜிஎஸ்டியை விதிக்கிறது. எனவே எஸ்பிஐ இந்த ஜிஎஸ்டியையும் வாடிக்கையாளரின் சேமிப்பு வங்கிக் கணக்கிலிருந்தே எடுத்துக் கொள்கிறது. எனவே ரூ.200 ஏடிஎம் சேவை கட்டணத்தில் 18% ஜிஎஸ்டி தொகை ரூ.36ஐயும் சேர்த்தால் மொத்தமாக ரூ.236 உங்கள் எஸ்பிஐ வங்கிக் கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்படும்.

எஸ்பிஐ மட்டுமல்ல இந்தியன் வங்கி, கனரா வங்கி, யூனியன் வங்கி என பொதுத்துறை வங்கிகளும், ஹெச்டிஎப்சி, ஐசிஐசிஐ என பல்வேறு தனியார் வங்கிகளும் ஏடிஎம் சேவைக்கு ஆண்டுதோறும் கட்டணங்களை வசூலித்து வருகின்றன. இந்த கட்டணம் 

click me!