வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி செய்தி... வரலாறு காணாத வகையில் உயரப்போகும் பெட்ரோல், டீசல் விலை..?

By vinoth kumarFirst Published Sep 16, 2019, 4:37 PM IST
Highlights

குறிப்பாக சவுதியிலிருந்து அதிகளவில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வதில் இந்தியாவும் ஒன்று. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலையும் கடுமையாக உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளனர்.

சவுதி அரேபியாவில் உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி ஆலையில் ஆளில்லா விமானங்கள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சர்வதேச அளவில் சவுதி அரேபியாவிலிருந்து தான் அதிகளவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில், அராம்கோ எண்ணெய் ஆலையில் ஆளில்லா விமானம் மூலம் ஏமன் கிளர்ச்சிப்படையினர் தாக்குதல் நடத்தினர். அதைத் தொடர்ந்து குர்அய்ஸில் உள்ள அதே நிறுவனத்தின் எண்ணெய் வயலிலும் தாக்குதல் நடந்தது. இதனால் இரு இடங்களிலும் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 4 வருடங்களுக்கு மேலாக ஏமனில் நடந்து வரும் உள்நாட்டு போரின் அதி தீவிர தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது.

 

இதனால், சவுதி அரேபியா அராம்கோவின் இரு ஆலைகளில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட தாக்குதலால் சுமார் 50 சதவீத எண்ணெய் வளத்தை  
அழித்துள்ளதாக கூறப்படுகிறது. நாள் ஒன்றிற்கு 9.8 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்த சவுதி அரேபியா, தற்போது அதில் 5.7 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தியை இழந்துள்ளது. 

எனவே, வரும் நாட்களில் கச்சா எண்ணெய் விலை கடுமையா உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக சவுதியிலிருந்து அதிகளவில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வதில் இந்தியாவும் ஒன்று. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலையும் கடுமையாக உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளனர்.

click me!