இந்தியாவின் பொருளாதாரம் ரொம்ப பலவீனமா இருக்கு..! கவலை தெரிவித்த ஐஎம்எப்..!

By Asianet TamilFirst Published Sep 13, 2019, 7:29 PM IST
Highlights

வாஷிங்டனில் நேற்று ஐஎம்எப் செய்தித்தொடர்பாளர் கெரி ரைஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ உலகப் பொருளாதாரம் குறித்தும், நாடுகளின் வளர்ச்சி குறித்தும் புதிய கணிப்புகளை வைத்திருக்கிறோம் அதை வெளியிட இருக்கிறோம். 

இந்தியாவின் பொருளாதாரம் ரொம்ப பலவீனமா இருக்கு..!  கவலை தெரிவித்த ஐஎம்எப்..!

நாங்க எதிர்பார்த்ததைக் காட்டிலும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ரொம்ப பலவீனமாக இருக்கிறது என்று சர்வதேச நிதியமான ஐஎம்எப் தெரிவித்துள்ளது

வாஷிங்டனில் நேற்று ஐஎம்எப் செய்தித்தொடர்பாளர் கெரி ரைஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ உலகப் பொருளாதாரம் குறித்தும், நாடுகளின் வளர்ச்சி குறித்தும் புதிய கணிப்புகளை வைத்திருக்கிறோம் அதை வெளியிட இருக்கிறோம். ஆனால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நாங்கள் எதிர்பார்த்ததைக் காட்டிலும் பலவீனமாக இருக்கிறது.

கார்ப்பரேட் நிறுவனங்கள், சுற்றுச்சூழலை ஒழுங்குபடுத்துதலில் உறுதியற்ற தன்மை நிலவுகிறது, வங்கி அல்லாத நிறுவனங்கள் பலவீனமான நிலையில் இருப்பதும் இந்தியாவின் பொருளாதார சரிவுக்கு காரணம் என்று நாங்கள் கருதுகிறோம்.

ஆனாலும், அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்த இடத்தில், உலக அளவில் இந்தியா இன்னும் வேகமாக வளர்ந்து வரும் நாடாக இருக்கிறது.இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை ஐஎம்எப் தொடர்ந்து கண்காணிக்கும் " எனத் தெரிவித்தார்

இந்தியாவின் நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சிக்குரிய கணிப்பை 7.03 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாகக் ஐஎம்எப் குறைத்துள்ளது. 2021-ம் ஆண்டில்தான் இந்தியாவி்ன் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதமாக வளர்வதற்கு வாய்ப்புள்ளது என ஐஎம்எப் கணித்துள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் முதல் காலாண்டில் 5 சதவீதமாகக் குறைந்ததால், ஐஎம்எப் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த தனது கணிப்பை மாற்றியுள்ளது.

click me!