அடேங்கப்பா.. பரவாயில்லையே.. தங்கம் விலை சரசரவென குறைஞ்சுடுச்சு..!

Published : Sep 06, 2019, 02:06 PM ISTUpdated : Sep 06, 2019, 04:56 PM IST
அடேங்கப்பா.. பரவாயில்லையே.. தங்கம் விலை சரசரவென குறைஞ்சுடுச்சு..!

சுருக்கம்

கிராமுக்கு 41 ரூபாய் குறைந்தும் , சவரனுக்கு 328 ரூபாய் குறைந்தும் 29 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

அடேங்கப்பா.. பரவாயில்லையே.. தங்கம் விலை சரசரவென குறைஞ்சுடுச்சு..! 

கடந்த மூன்று நாட்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வந்ததால் சவரன் 30 ஆயிரத்தை கடந்து விற்பனையானது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

இன்றைய நிலையில் ஒரு சவரன் தங்கம் வாங்க வேண்டுமென்றால் குறைந்தது செய்கூலி சேதாரம் என சேர்த்து 33 முதல் 34 ஆயிரம் ரூபாய் ஆகும் என்ற நிலை உருவாகியிருக்கின்றது. 

இன்றைய காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு 41 ரூபாய் குறைந்து 3700 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதன்மூலம் சவரன் 30 ஆயிரத்திற்கு கீழ் இறங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கம் விலை நிலவரம் 
  
கிராமுக்கு 41 ரூபாய் குறைந்தும் , சவரனுக்கு 328 ரூபாய் குறைந்தும் 29 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

வெள்ளி விலை நிலவரம் 

ஒரு கிராம் வெள்ளி 2.30 பைசா குறைந்து 52.50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

குறைந்த விலையில் கார் வாங்கினாலும் அதிக செலவு வரலாம்! கவனிக்க வேண்டிய 8 விஷயங்கள்!
2016 vs 2026 : தங்கம் டூ ஒரு கிரவுண்டு நிலம்... 10 வருஷத்துக்கு முன்பு என்ன விலை? இப்போது எவ்வளவு?