வருமான வரி செலுத்துபவர்கள் வாடகை வருவாய், வீட்டுக்கடன் சலுகை போன்றவை குறித்து போலியான தகவல்களை கொடுத்து வரி ஏய்ப்பு செய்வதைத் தடுக்க வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
சம்பள வருவாய் பெறும் வரி செலுத்துவோர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும்போது முறைகேடுகளில் ஈடுபடுவதைத் தடுக்க புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நெருங்கிய உறவினர்களிடமிருந்து பெற்ற போலியான வாடகை ரசீது, வீட்டுக் கடன், போலியான நன்கொடைகள் உள்ளிட்டவை பலவிதமான வரி ஏய்ப்புகளைத் தடுக்க வருவமான வரித்துறை திட்டமிட்டுள்ளது.
இதற்கு முன் வருமான வரி அதிகாரிகளை எளிதாக ஏமாற்றிக்கொண்டிருந்தவர்கள் அதற்கான விளைவுகளைண் சந்திக்க நேரிடும் என்றும் வருவாய் துறை மென்பொருள் மூலம் அவர்களின் வருவாய் சிவப்பு பட்டியலுக்குள் வந்துவிடும் என்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
வரி செலுத்துபவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, வரி விலக்கு கோருவதற்கான ஆவணங்களை வழங்குமாறு கேட்டுக்கொண்டனர். பிரிவு 10 (13A) இன் கீழ் வீட்டு வாடகை, பிரிவு 10 (14) இன் கீழ் உதவியாளரை பணியமர்த்துவது ஆகியவற்றிற்கு வழங்கப்படும் விலக்குகள் அல்லது பிரிவு 24 (b) இன் கீழ் வீட்டுக் கடன் மீதான வட்டிக்கு அளிக்கப்படும் வரிச்சலுகை போன்றவை குறித்த ஆவணங்கள் கோரப்பட்டுள்ளன.
DA Hike : அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. 4 % அகவிலைப்படி உயர்வு - முழு விபரம்
50 லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கும் நபர்களுக்கு, பத்தாண்டுகளில் மறுமதிப்பீடு செய்யலாம். மறுபுறம், 50 லட்சத்துக்கும் குறைவான வருமானம் உள்ளவர்களுக்கு, எட்டு ஆண்டுகளில் மறுமதிப்பீடு மேற்கொள்ளப்படலாம்.
மேலும், பதிவுகளை கணினிமயமாக்குவது, அரசியல் கட்சிகள் அல்லது அறக்கட்டளைகள் தங்கள் வரிக் கணக்குகளில் குறிப்பிட்டுள்ள தரவுகளை தனிநபர்கள் குறிப்பிடும் நன்கொடை விவரங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க வருமான வரித்துறைக்கு உதவுகிறது.
வரி மற்றும் ஒழுங்குமுறை ஆலோசனை நிறுவனமான Asire கன்சல்டிங்கின் நிர்வாகப் பங்குதாரரான ராகுல் கார்க் கூறுகையில்,, வருமான வரி தாக்கல் செய்யும்போது அளிக்கப்படும் விவரங்களின் நம்பகத்தன்மையை ஆய்வு செய்வதற்காக, வருமான வரித்துறை தரவுகளின் அடிப்படையில் தனிநபர்களின் விரிவான விவரக்குறிப்பு தயார் செய்யப்பட்டு வருவதாகக் கூறுகிறார்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, போலியான நன்கொடைகளைக் காட்டுபவர்களுக்கு வருமான வரித்துறை வரி ஏய்ப்பு நோட்டீஸ் அனுப்புகிறது. இந்த வகையில் தொழில்நுட்ப வசதி வரி ஏய்ப்பைக் கண்டறிய சரியான முறையில் பயன்படுத்தப்படுகிறது என்று கணக்குத் தணிக்கை வல்லுநர் சித்தார்த் பன்வாட் கூறுகிறார்.
5 லட்சம் முதலீடு செய்தால் 10 லட்சம் கிடைக்கும்.. இரட்டிப்பு லாபம் தரும் போஸ்ட் ஆபிஸ் திட்டம்