Rolls Royce aircraft : எலெக்ட்ரிக் விமானம் தயாரிக்கும் ரோல்ஸ் ராய்ஸ் - வெளியீடு எப்ப தெரியுமா?

Nandhini Subramanian   | Asianet News
Published : Feb 15, 2022, 04:16 PM ISTUpdated : Feb 16, 2022, 09:41 AM IST
Rolls Royce aircraft : எலெக்ட்ரிக் விமானம் தயாரிக்கும் ரோல்ஸ் ராய்ஸ் - வெளியீடு எப்ப தெரியுமா?

சுருக்கம்

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் சிறிய ரக எலெக்ட்ரிக் விமானம் ஒன்றை  உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் சிறிய ரக எலெக்ட்ரிக் விமானம் ஒன்றை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. மேலும் இதனை அடுத்த மூன்று  முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் சாத்தியப்படுத்த முடிவு செய்துள்ளது. இதுபற்றிய தகவலை ரோல்ஸ் ராய்ஸ் மூத்த நிர்வாக  அதிகாரி தெரிவித்து இருக்கிறார். 

ஆறு முதல் எட்டு பேர் வரை பயணம் செய்யக்கூடிய சிறிய ரக எலெக்ட்ரிக் விமானத்தில் 600 கிலோவாட் ஹவர் திறன் கொண்ட பேட்டரி-எலெக்ட்ரிக் சிஸ்டம் வழங்கப்பட இருப்பதாக ரோல்ஸ் ராய்ஸ் நிறுவன தலைவர் ராப் வாட்சன் தெரிவித்தார். இந்த விமானம் 148 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கும். பேட்டரி தொழில்நுட்பங்களில் ஏற்படும் வளர்ச்சி இதன் ரேன்ஜை மேலும் அதிகப்படுத்தும்.

2030 வாக்கில் சிறிய ரக விமானங்களில் உள்ள பேட்டரிகளை கொண்டு சுமார் 400 கிலோமீட்டர் வரை பயணம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் மீது ரோல்ய்ஸ் ராய்ஸ் அதிக நம்பிக்கை வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டு காலக்கட்டத்தில் 8 முதல் 18 இருக்கைகள் கொண்ட விமானம் பயன்பாட்டுக்கு வரும் என ராப் வாட்சன் தெரிவித்தார். 

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ப்ரோபல்ஷன் சிஸ்டம் கொண்டு எலெக்ட்ரிக் வெர்டிக்கல் டேக்-ஆஃப், லேண்டிங் அல்லது eVTOL உள்ளிட்டவைகளை மேற்கொள்ள முடியும். மாற்று எரிபொருள் மூலம் இயங்கும் விமானங்களை உருவாக்கும் பணிகளில் உலகம் முழுக்க பல்வேறு ஸ்டார்ட் அப் மற்றும் பெரும் நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

Rupee Value: இந்திய ரூபாய் மதிப்பு சரிய காரணம் இதுதான்.! இதனால் இவ்ளோ பாதிப்பா?!
Business: மாதத்திற்கு ரூ.1 லட்சம் சம்பாதிப்பது இவ்ளோ ஈசியா?! தித்திக்கும் வருமானம் தரும் தேனீ வளர்ப்பு.!