jio 5g trial: அன்லிமிடட் டேட்டா! இன்று முதல் ரிலையன்ஸ் ஜியோ 5ஜி சேவை: 4 நகரங்களில் பீட்டா பரிசோதனை தொடக்கம்

By Pothy RajFirst Published Oct 5, 2022, 10:17 AM IST
Highlights

குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடட் 5ஜி டேட்டா, 1ஜிபி வேகத்துடன், ரிலையன்ஸ் ஜியோ 5ஜி சேவையின் பீ்ட்டா பரிசோதனை இன்று 4 நகரங்களில் தொடங்குகிறது. 

குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடட் 5ஜி டேட்டா, 1ஜிபி வேகத்துடன், ரிலையன்ஸ் ஜியோ 5ஜி சேவையின் பீ்ட்டா பரிசோதனை இன்று 4 நகரங்களில் தொடங்குகிறது. 

டெல்லி, மும்பை, கொல்கத்தா, வாரணாசி ஆகிய நகரங்களில் உள்ள ஜியோ பயன்பாட்டார்களுக்கு மட்டும் இந்த சேவை பரிசோதனை முயற்சியாகத் தொடங்குகிறது.

சர்வதேச கச்சா எண்ணெய் விலை 30 % சரிந்தும் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு இல்லை !

பீட்டா பரிசோதனை என்பது, ஒரு சேவை பொதுமக்களுக்கு முறைப்படி நடைமுறைப்படுத்தும் முன்பாக நடக்கும் இறுதிக்கட்ட பரிசோதனையாகும். 

ரிலையன்ஸ் ஜியோ வெளியிட்டஅ றிக்கையில் “ 5ஜி சேவை முழுமையாகத் தொடங்கும் வரை, சேவை வரிவுபடுத்தப்படும்வரை 4 நகரங்களில் உள்ள குறிப்பிட்ட ஜியோ வாடிக்கையாளர்களுக்கு மட்டும், 5ஜி சேவை பீட்டா பரிசோதனையாக வழங்கப்படுகிறது. 

இந்த பரிசோதனை முயற்சியில் தேர்ந்தெடுக்கப்படும் ஜியோ சந்தாதாரர்கள் தங்கள் மொபைல் போனையோ அல்லது சிம்கார்டையோ மாற்றத் தேவையில்லை. அவர்களுக்கு தானாகவே 5ஜி சேவையாக மாறிக்கொள்ளும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது. 

500 நாட்கள்; 25ஆயிரம் மொபைல் டவர்; ரூ.26,000 கோடி ஒதுக்கீடு: மத்திய அரச ஒப்புதல்

அனைத்துவிதமான மொபைல் போன்களிலும், 5ஜி மொபைல் போனிலும் 5சேவை கிடைக்கும் வகையில் தொழில்நுட்பத்தை மாற்றி வருகிறோம். இதன் மூலம் 5ஜி சேவை தடையின்றி கிடைக்கும்”எனத் தெரிவித்தார்

கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த ரிலையன்ஸ் பொதுக்குழுக்கூட்டத்தில் பேசிய ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி, தீபாவளிப் பண்டிகைக்குள் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக சென்னை, மும்பை, டெல்லி மற்றும் கொல்க்ததாவில் சேவை அறிமுகம் செய்யப்படும்.அதன்பின் படிப்படியாக சேவை விரிவுபடுத்தப்பட்டு 2023, டிசம்பருக்குள் அனைத்து நகரங்களிலும், கிராமங்களிலும், தாலுகாவிலும் 5ஜி சேவை கிடைக்கும் வகை செய்யப்படும் எனத் தெரிவித்திருந்தார்

ரிலையன்ஸ் ஜியோ லேப்டாப் வருது! இவ்வளவுதான விலை?

5ஜி சேவைக்காக  ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ.2 லட்சம் கோடியை முதலீடு செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல் கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து 5ஜி ஸ்மார்ட்போனையும் குறைந்த விலையில் தயாரித்து வருகிறது.

இதற்கிடையே சனிக்கிழமை முதல் 8 நகரங்களில் தனது 5ஜி சேவையை பார்தி ஏர்டெல் நிறுவனம் தொடங்குகிறது. 2024ம் ஆண்டுக்குள் நாடுமுழுவதும் ஏர்டெல் 5ஜி சேவை விரிவுபடுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

click me!