#Repo வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை; 6.50% ஆக தொடரும்; வீட்டுக் கடனுக்கான மாதாந்திர தொகை அதிகரிக்குமா?

By Dhanalakshmi G  |  First Published Oct 6, 2023, 10:28 AM IST

ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு, தற்போதைய நிலையைத் தொடர முடிவு செய்து ரெப்போ வட்டி விகிதத்தை 6.50% ஆக வைத்திருக்க முடிவு செய்துள்ளது. 
 


இந்திய ரிசர்வ் வங்கி நாட்டின் நிதிக் கொள்கை குறித்து ஒவ்வொரு மாதமும் ஆலோசித்து அதற்கு தகுந்தவாறு ரெப்போ மற்றும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதங்களை வெளியிட்டு வருகிறது. கடந்த மூன்று நாட்கள் ஆய்வுக்குப் பின்னர் இன்று ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை குறித்து ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும், 6.50%-த்திலேயே தொடரும் என்று அறிவித்தார்.

ரஷ்யா-உக்ரைன் போரை அடுத்து ரிசர்வ் வங்கி மே, 2022-ல் படிப்படியாக கொள்கை விகிதங்களை அதிகரிக்கத் தொடங்கியது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரெப்போ வட்டி விகிதத்தை 6.5 சதவீதமாக உயர்த்தியது. இதையடுத்து தொடர்ந்து வந்த மாதங்களில் ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றத்தையும் அறிவிக்கவில்லை. ரெப்போ விகிதம் மே 2022 மற்றும் பிப்ரவரி 2023 க்கு இடையிலான கால கட்டங்களில் ஒட்டுமொத்தமாக 250 பேசிஸ் பாயின்ட் விகிதத்தில் உயர்த்தப்பட்டது.

Latest Videos

undefined

Today Gold Rate in Chennai : நகைப்பிரியர்களுக்கு குட்நியூஸ்! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்! முந்துங்கள்.!

ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லாத காரணத்தால், வங்கிக் கடனில் வீடு வாங்கி வங்கிக்கு கடன் செலுத்தி வரும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வட்டி விகிதம் இல்லை. இதுவரை  மாதம்தோறும் வங்கிகளுக்கு செலுத்தி வரும் வீட்டுக் கடன் தொகையில் எந்த மாற்றமும் இருக்காது. ஆர்பிஐயின் இந்த நடவடிக்கை ரியல் எஸ்டேட் துறைக்கு சாதகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 

கவர்னர் சக்திகாந்த தாஸ் தனது அறிவிப்பில், ''அனைத்து காரணிகளையும் கருத்தில் கொண்டு, நடப்பு நிதியாண்டின் (2023-23க்கான) நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி (ஜிடிபி) 6.5 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதற்கு இணையாக பாதகங்களும் சரி சமமாக இருக்கும். அடுத்த நிதியாண்டான 2024-25-ன் முதல் காலாண்டு ஜிடிபி வளர்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.  2023ஆம் ஆண்டில் அக்டோபர்-டிசம்பருக்கான ஜிடிபி வளர்ச்சி கணிப்பு 6.0 சதவீதமாகவும், 2024 இல் ஜனவரி-மார்ச் மாதத்திற்கான ஜிடிபி வளர்ச்சி கணிப்பு 5.7 சதவீதமாகவும் உள்ளது. இதில் எந்த மாற்றமும் இல்லை.

ஒரு நாளைக்கு ரூ.50 மட்டும் போதும்.. ரூ.35 லட்சம் கிடைக்கும் போஸ்ட் ஆபிஸ் திட்டம் தெரியுமா.?

ஆனால், 2023ஆம் ஆண்டின் அக்டோபர் - டிசம்பர் மாதங்களில் உணவு பணவீக்கம் நிலையானதாக இருக்காது என்று கணிக்கப்பட்டுள்ளது. இது தொடர்ந்து கண்காணிக்கப்படும்'' என்றார்.

ரெப்போ வட்டி விகிதம் என்றால் என்ன?

வர்த்தக வங்கிகளுக்கு மத்திய வங்கி கொடுக்கும் கடன் மீதான வட்டி விகிதம்தான் ரெப்போ வட்டி விகிதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த வட்டி விகிதத்தை மத்திய வங்கி அதிகரிக்கும்பட்சத்தில் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கும் வீட்டுக் கடன் மீதான வட்டி விகிதத்தை வங்கிகள் உயர்த்தக் கூடும். இது ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் என்று கூறப்படுகிறது. தற்போது மத்திய வங்கி கடன் மீதான வட்டியை உயர்த்தாத நிலையில், வங்கியில் வீட்டுக் கடன் வாங்கி இருக்கும் வாடிக்கையாளர்களையும் பாதிக்காது. 

https://t.co/bjo3MjAYqs

— ReserveBankOfIndia (@RBI)
click me!