
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெள்ளிக்கிழமை ரெப்போ வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைப்பதாக அறிவித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெள்ளிக்கிழமை ரெப்போ வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்து அறிவித்துள்ளது. இந்தளவிற்கு கடந்த ஐந்தாண்டுகளில் குறைப்பு செய்யப்படவில்லை. பெஞ்ச்மார்க் விகிதம் இப்போது 6.5% இலிருந்து 6.25% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. நிதிக் கொள்கை ஆய்வுக் கூட்டத்தின் (MPC) முடிவுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
சமீபத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்து இருந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ரூ.12 லட்சம் வரை ஆண்டு வருமானம் இருப்பவர்களுக்கு வரி இல்லை என்ற பெரிய அறிவிப்பை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து இன்று ரெப்போ வட்டி விகித குறைப்பு அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது. இது நடுத்தர வர்க்க மக்களுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.
"நிதி ஆய்வுக் கூட்டம் வட்டி விகிதத்தை 6.5 சதவீதத்திலிருந்து 6.25 சதவீதமாகக் குறைக்க ஒருமனதாக முடிவு செய்தது," என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா கூறினார்.
3 ஆயிரம் இருந்தா போதும்; 1 வருடத்துக்கு டோல் கட்டணம் செலுத்த வேண்டாம்!
மேலும் அவர் கூறுகையில், "இதன் விளைவாக, நிலையான வைப்பு வசதி (SDF) விகிதம் 6.0 சதவீதமாகவும், மார்ஜினல் ஸ்டேண்டிங் (MCF) விகிதம் மற்றும் வங்கி வட்டி விகிதம் 6.5 சதவீதமாகவும் இருக்கும்'' என்று தெரிவித்தார்.
ரெப்போ விகிதம் என்றால் என்ன?
ரெப்போ விகிதம் என்பது வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் இருந்து (RBI) வாங்கும் கடன் ஆகும். வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் கடன் வாங்கும்போது விதிக்கப்படும் வட்டி விகிதம். இதைப் பொறுத்துதான் வங்கிகள் வட்டியை நிர்ணயிக்கின்றன. இது தனிப்பட்ட நபர்கள் மட்டுமின்றி, வர்த்தக நிறுவனங்களுக்கும் சாதகமாக இருக்கும்.
வீட்டுக் கடன் சுமையைக் குறைக்க வேண்டுமா?
இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழுவின் (MPC) வட்டி விகிதக் குறைப்பு அறிவிப்பின் மூலம், கடன் வாங்கியவர்கள் விரைவில் மாதாந்திர தவணைகளிலிருந்து (EMI) பயன் பெறலாம். குறிப்பாக வீட்டுக் கடன், தனிநபர் கடன் மற்றும் வணிகக் கடன் வாங்கி இருப்பவர்களுக்கு வட்டி விகிதம் குறையும். வங்கிக்கு செலுத்த வேண்டிய மாதாந்திர தவணையிலும் சிறிய தொகை லாபத்தை கொடுக்கும்.
EMI எவ்வளவு குறையும்:
20 வருட கடன் தவணைக் காலத்தில் வீட்டுக் கடன் வாங்கி இருப்பவர்களுக்கு பெரிய நிவாரணம் கிடைத்துள்ளது. EMI 1.8% குறைகிறது. ஏனெனில் RBI ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது.
வீட்டு மாதத் தவணை எவ்வளவு மிச்சமாகும்?
உங்கள் வீட்டுக் கடனின் வட்டி விகிதம் 8.75% ஆக இருந்தால், ரெப்போ விகிதம் குறைக்கப்பட்ட பிறகு அது 8.50% ஆகவும் குறைக்கப்படுகிறது. இது உங்கள் மாத தவணைகளில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பார்க்கலாம். 25 அடிப்படை புள்ளிகள் வீதக் குறைப்பினால், 20 வருட காலத்திற்கு ரூ. 50 லட்சம் வீட்டுக் கடன் மீது உங்களுக்கு என்ன லாபம் என்று பார்க்கலாம்.
இந்தக் கடன் மீது நீங்கள் இதுவரை மாதம் 44,186 மாதத் தவணையாக கட்டி இருக்கலாம். இனி நீங்கள் 43,391 கட்ட வேண்டும். இதன் மூலம் உங்களுக்கு மாதம் ரூ. 791 மிச்சமாகிறது.
வீட்டுக் கடன் மட்டுமின்றி ரெப்போ வட்டி குறைப்பு மூலம் ரியல் எஸ்டேட், வர்த்தக நிறுவனங்கள் ஆகியவையும் பலன் பெறும். வர்த்தகம் விரிவடைவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி ரியல் எஸ்டேட் துறையினருடன் உறவை மேற்கொண்டு புதிய வட்டி விகிதத்தில் வீடு வாங்குபவர்கள் வாங்கலாம்.
வீடு வாங்கும் போதும் விற்கும் போதும் அதிக வரி வசூலிக்கப்படுவது ஏன்?
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.