இந்திய ரிசர்வ் வங்கி, இரண்டு வங்கிகளின் உரிமத்தை ரத்து செய்துள்ளதுடன், பரிவர்த்தனைக்கும் தடை விதித்துள்ளது
மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் செயல்படும் இரண்டு கூட்டுறவு வங்கிகளின் உரிமங்களை ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது. ஜூலை 5ஆம் தேதியன்று இரு வங்கிகளின் உரிமமும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்பிறகு, எந்தவொரு வங்கி பரிவர்த்தனையையும் செய்ய வேண்டாம் என இரு வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, HDFC மற்றும் HSBC வங்கிகளுக்கு அபராதம் விதித்த நிலையில், இரண்டு கூட்டுறவு வங்கிகளின் உரிமங்களை ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புல்தானாவைச் சேர்ந்த மல்காபூர் நகர கூட்டுறவு வங்கி லிமிடெட் மற்றும் கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த சுஷ்ருதி சௌஹர்தா சககர் வங்கி (சுஷ்ருதி சௌஹர்தா சககார வங்கி நியாமிதா) ஆகிய இரு வங்கிகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி தகவலின்படி, உரிமம் ரத்து செய்யப்பட்ட பிறகு, இந்த இரு வங்கிகளும் எந்தவொரு பரிவர்த்தனையையும் செய்ய முடியாது; டெபாசிட்களை செய்யவோ ஏற்கவோ முடியாது.
போதிய மூலதனம் மற்றும் வருவாய் ஈட்டும் திறனைக் கருத்தில் கொண்டு மேற்கண்ட இரண்டு கூட்டுறவு வங்கிகளின் உரிமத்தை ரத்து செய்து ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. மகாராஷ்டிராவின் கூட்டுறவு ஆணையர் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரிடம் வங்கியை மூடுவதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது. இந்த நடவடிக்கைகளுக்காக ஒரு நபரை நியமிக்குமாறும் ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது.
தமிழக அரசு பெண்கள் அதிகாரமளித்தல் துறையில் வேலைவாய்ப்பு: எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
அதேசமயம், இந்த வங்கிகளில் டெபாசி செய்த ஒவ்வொருக்கும், டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கேரண்டி கார்ப்பரேஷனில் (DICGC) இருந்து ஐந்து லட்சம் ரூபாய் வரையிலான டெபாசிட் காப்பீட்டுக் கோரிக்கைத் தொகையைப் பெற உரிமை உண்டு எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி வழங்கியுள்ள தரவுகளின்படி, 97.60 சதவீதம் பேருக்கு டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கேரண்டி கார்ப்பரேஷனில் இருந்து தங்களது வைப்புத் தொகையின் முழுத் தொகையையும் பெற உரிமை பெற்றுள்ளனர். மல்காபூர் நகர கூட்டுறவு வங்கியை வங்கி வணிகத்தை மேற்கொள்ள அனுமதித்தால், அது பொது நலனை பாதிக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. தற்போதைய நிதி நிலைமையால் இனிவரும் காலங்களில் அந்த வங்கியால், டெபாசிட் செய்தவர்களுக்கு முழுப் பணத்தையும் செலுத்த முடியாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.