ரிசர்வ் வங்கியில் பணியாற்ற விருப்பமா? 950 காலியிடங்கள்: கடைசி நாள், தேர்வு தேதி, மாத ஊதியம் தெரியுமா?

Published : Feb 17, 2022, 05:45 PM ISTUpdated : Feb 17, 2022, 05:46 PM IST
ரிசர்வ் வங்கியில் பணியாற்ற விருப்பமா? 950 காலியிடங்கள்: கடைசி நாள், தேர்வு தேதி, மாத ஊதியம் தெரியுமா?

சுருக்கம்

ரிசர்வ் வங்கியில் துணை அதிகாரி(RBI Assistant Recruitment 2022) பதவிக்கான 950 காலியிடங்களை நிரப்புவதற்கு இன்று முறைப்படி அறிவிப்பு இணையதளத்தில் வெளியானது.

ரிசர்வ் வங்கியில் துணை அதிகாரி (RBI Assistant Recruitment 2022)பதவிக்கான 950 காலியிடங்களை நிரப்புவதற்கு இன்று முறைப்படி அறிவிப்பு இணையதளத்தில் வெளியானது.

ரிசர்வ் வங்கியில் துணை அதிகாரி அளவில் நாடுமுழுவதும் 950 காலியிடங்கள் உள்ளன. அதை நிரப்புவதற்கான அறிவிக்கையை ஆர்பிஐ தனது இணையதளத்தில் இன்று வெளியிட்டுள்ளது. விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஆன்-லைனில் மூலம் அனுப்ப வேண்டும். கடைசி தேதி 2022, மார்ச் 8ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடைசி நேரப் பரபரப்பைத் தவிர்க்கும் வகையில் விண்ணப்பிக்க விரும்புவோர் இன்றே ரிசர்வ் வங்கி இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்தப் பதவிக்கான முதல்நிலைத் தேர்வு 2022, மார்ச் 26 மற்றும் 27ம் தேதி ஆன்-லைன் மூலம் நடக்கும். முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் மட்டுமே பிரதானத் தேர்வு எழுதமுடியும். மெயின் தேர்வு மே மாதம் நடக்கும்.

இந்தியாவில் அகமதாபாத், பெங்களூரு, போபால், சண்டிகர், சென்னை,பாட்னா, ஜெய்பூர், ஹைதராபாத் என எந்தநகரங்களில் வசிப்போரும் இந்தப் பதவிக்கு விண்ணபிக்க முடியும். 

தகுதி என்ன?
இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிப்போர் வயது 20 முதல் 28வயதுட்குட்பட்டவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர் இளநிலை பட்டதாரியாகவும், 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். கணினி இயக்கம் குறித்த அறிவும், புரிதலும் இருத்தல் அவசியம்.

பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் 33வயதுவரை விண்ணப்பிக்கலாம். ஓபிசி பிரிவினர் 31 வயதுவரையிலும் விண்ணப்பிக்கலாம். இது தவிர முன்னாள் ராணுவ வீரர்கள், கணவனை இழந்த பெண்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு வயது தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

தேதிகள் விவரம்?

துணை அதிகாரிக்கான ஆன்-லைன் விண்ணப்பம் இன்று தொடங்கிவிட்டது. மார்ச் 8ம்தேதிக்குள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். முதல்நிலைத் தேர்வு 2022, மார்ச் 26 மற்றும் 27 தேதிகளில் ஆன்-லைன் மூலம் நடக்கும். பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கு தேர்வுக்கட்டணம் ரூ.50, பொதுப்பிரிவினர், பொருளாதார ரீதியாக பின்தங்கியோருக்கு ரூ.450 கட்டணம். 

மாதஊதியம் எவ்வளவு?
ரிசர்வ் வங்கியின் துணை அதிகாரிக்கு தேர்வாகிவிட்டால் மாதம் தொடக்கநிலையில் ரூ.36,091 பெறலாம். rbi.org.in  என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் ஆன்-லைனில் மட்டுமே அனுப்ப வேண்டும். அந்த விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது


 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

தங்க கடனில் புதிய விதிகள்.. ஆர்பிஐயின் அதிரடி மாற்றம்.. மக்களே நோட் பண்ணுங்க
அரசு ஊழியர்கள் வயிற்றில் பாலை வார்த்த மத்திய அரசு.. 1 கோடி குடும்பங்கள் நிம்மதி.!