ஒரே நிமிடத்தில் ரேஷன் கார்டுடன் ஆதார் இணைப்பது எப்படி? இதோ!

By Dinesh TG  |  First Published Aug 26, 2024, 3:30 PM IST

வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு அரசு இலவச ரேஷன் வழங்குகிறது. ரேஷன் கார்டின் பலனைப் பெற, ஆதார் அட்டையுடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டை ஆதார் அட்டையுடன் இணைப்பதற்கான கடைசி தேதி செப்டம்பர் 30வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
 


வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு அரசு ரேஷன் கார்டு மூலமகா இலவச அரசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட ரேஷன் பொருட்களை அரசு வழங்குகிறது. இந்த ரேஷன் மானிய விலையில் கிடைக்கிறது. இதனால் அதற்கு பணம் செலுத்த வேண்டியதில்லை. இந்தத் திட்டத்தின் பலனைப் பெற, ரேஷன் கார்டு வைத்திருப்பவர் தனது ஆதார் அட்டையுடன் இணைப்பது மிகவும் அவசியம். போலி ரேஷன் கார்டுகளைப் பயன்படுத்துவதைத் தடுக்க இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. அதே நேரத்தில், பொது விநியோக முறை அல்லது PDS-ன் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை பராமரிக்கப்படுகிறது.

இன்று உங்கள் ரேஷன் கார்டை உங்கள் ஆதார் அட்டையுடன் வீட்டில் இருந்தபடியே இணைப்பது எப்படி என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

ஆதார்-ரேஷன் இணைப்பிற்கான கடைசி தேதி

ரேஷன் கார்டை ஆதார் அட்டையுடன் இணைப்பதற்கான கடைசி தேதி செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே ஆதார்-ரேஷன் இணைப்பிற்கு இன்னும் நேரம் உள்ளது. ஆனால் கடைசி நாட்களில் சர்வர் பிரச்சனை வருகிறது. எனவே உங்கள் ஆதார்-ரேஷன் கார்டை விரைவில் இணைக்கவும்.

ஆதார்-ரேஷன் இணைப்பது எப்படி?

  • முதலில் பொது விநியோக முறை அல்லது PDS-ன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லவும்.
  • பின்னர் வலைத்தளத்தில் உள்நுழையவும். உங்களிடம் கணக்கு இல்லையென்றால், கணக்கை உருவாக்கவும்.
  • அதன் பிறகு போர்ட்டலில் உங்கள் ரேஷன் கார்டு எண் மற்றும் பிற தேவையான தகவல்களை உள்ளிடவும்.
  • ஆதாரில் பெயர்கள் பதிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களின் ஆதார் எண்களை உள்ளிடவும்.
  • பின்னர் கேட்கப்பட்ட தகவலை நிரப்பி சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.
  • உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும்.
  • OTP சரிபார்ப்புக்குப் பிறகு சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்யவும்.
  • சமர்ப்பித்த பிறகு, விண்ணப்பம் உறுதிப்படுத்தல் செய்தியைப் பெறுவீர்கள்.

உங்கள் ரேஷன் கார்டு ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதை இப்படி சரிபார்க்கவும்

சிறிது நேரம் கழித்து, மீண்டும் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் சென்று அல்லது உங்கள் உள்ளூர் ரேஷன் கடைக்குச் சென்று உங்கள் ஆதார் ரேஷனுடன் இணைக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதைச் சரிபார்க்கலாம். ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையத்திற்குச் சென்று அல்லது ஹெல்ப்லைன் எண்ணை அழைத்து உதவி பெறலாம்.

Latest Videos

ஆதார் இலவச அப்டேட் முதல் கேஸ் சிலிண்டர் விலை வரை.. செப்டம்பர் 1 முதல் ஏற்படப்போகும் 7 மாற்றங்கள்!
 

click me!