பொன்முடியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குமாறு முதல்வருக்கு ஆளுநர் அறிவுரையா? என்று கேள்வி எழுப்பி ராஜ்பவன் விளக்கம் அளித்துள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோரை விடுதலை செய்த தீர்ப்பை ரத்து செய்து தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், தண்டனை விவரங்களை நாளை காலை 10.30 மணிக்கு அறிவிக்க உள்ளது.
கடந்த 2006 - 2011 ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சியில், உயர்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்த போது, வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக, அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக 2011-ம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை விடுதலை செய்து கடந்த 2016ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேல்முறையீடு செய்திருந்தனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இந்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவர்களின் வருமான வரிக்கணக்கு அடிப்படையில் வழக்கில் இருந்து விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது தவறு எனவும், 64.90% வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது நிரூபணமாகியுள்ளது எனவும், லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்களை கணக்கில் கொள்ளாமல் விடுதலை செய்துள்ளதாகக் கூறி, பொன்முடி, அவரது மனைவியை விடுதலை செய்த தீர்ப்பை ரத்து செய்து தீர்ப்பளித்தார்.
இந்த தீர்ப்பின் காரணமாக பொன்முடி, எம்.எல்.ஏ. பதவியில் நீடிக்கும் தகுதியை இழக்கிறார். நாளை பொன்முடிக்கான தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படவுள்ளன. இந்நிலையில் அமைச்சர் பொன்முடியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குமாறு முதலமைச்சரிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி. அறிவுறுத்தியதாக ஊடகத்தில் வந்த செய்திக்கு ஆளுநரின் ஆலோசகர் திருஞானசம்பந்தம் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுபோன்ற செய்திகளை வெளியிடும் முன் ஆளுநர் மாளிகையிடம் கேட்டு தெளிவு பெறுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
குறைந்த விலையில் தாய்லாந்தில் நியூ இயர் கொண்டாட ஆசையா..சூப்பரான ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ்..