பிரதமர் மோடியின் யூடியூப் சேனல் மாதம்தோறும் பல கோடிகளில் வருமானம் ஈட்டி வருகிறது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேஸ்புக், எக்ஸ் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் அக்கவுண்ட் வைத்துள்ளார். இதேபோல் Narendra Modiஎன்ற பெயரில் அபிஷியல் யூடியூப் சேனல் ஒன்றும் உள்ளது. இந்த சேனல் கடந்த 2007ம் ஆண்டு அக்டோபர் 26ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த யூடியூப் சேனலில் பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் திட்டங்கள், அவர் பங்கேற்கும் அரசு விழாக்கள், பிரதமரின் பேட்டிகள் என மோடி பங்கேற்கும் அனைத்து நிகழ்வுகளும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
பிரதமர் மோடியின் யூடியூப் சேனலில் 26.5 மில்லியன் (2.6 கோடி) சப்ஸ்க்ரைபர்களைக் கொண்டுள்ளது. உலகளவில் யூடியூப் சேனலில் 2 கோடி சப்ஸ்க்ரைபர்களைக் கொண்ட ஒரே அரசியல் தலைவர் பிரதமர் மோடி மட்டுமே. இது மட்டுமின்றி பிரதமரின் யூடியூப் சேனல் வியூஸ் ம்ற்றும் லைக்குகள் மூலம் மாதம்தோறும் பல கோடி வருமானம் ஈட்டியுள்ளது.
அதாவது பிரதமர் மோடியின் யூடியூப் சேனல் மாதம் 1,89,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1,62,49,520.70) முதல் 5,67,100 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.4,87,47,697.38) வரை மாதம்தோறும் வருமானம் ஈட்டி வருவதாக vidIQ அறிக்கை கூறுகிறது. பிரதமரின் யூடியூப் சேனலில் இதுவரை 29,272 வீடியோக்கள் அப்லோட் செய்யப்பட்டுள்ளன. இந்த வீடியோக்கள் 6,360,331,183 பார்வைகளை பெற்றுள்ளது.
இந்த யூடியூப் சேனலில் அப்லோட் செய்யப்படும் பெரும்பாலான வீடியோக்கள் 40,000 பார்வைகளை கடந்துள்ளன. அதிக சப்ஸ்க்ரைபர்களை கொண்டுள்ளதாலும், அதிக பார்வைகளை பெற்றுள்ளதாலும் பிரதமர் மோடியின் யூடியூப் சேனலுக்கு பல கோடிகளில் வருமானம் கொட்டுகிறது. இந்த சேனலில் ஒவ்வொரு வாரமும் சராசரிய 19 வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. பேஸ்புக்கில் பிரதமர் மோடிக்கு 48 மில்லியன் பின்தொடர்பவர்கள் உள்ளனர். மேலும் இன்ஸ்டாகிராமிலும் பிரதமர் மோடியை 82.7 மில்லியன் நபர்கள் பின்தொடர்கிறார்கள்.
பிரதமர் மோடிக்கு அடுத்தபடியாக பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ, யூடியூப் சேனலில் பின்தொடர்பவர்களின் அடிப்படையில் இரண்டாவது மிக உயர்ந்த உலகத் தலைவராக உள்ளார். அவர் 64 லட்சம் (6.4 மில்லியன்) சப்ஸ்க்ரைபர்கள் கொண்டுள்ளார். இது மோடியின் யூடியூப் சேனலை ஒப்பிடும்போது நான்கில் ஒரு பகுதிதான்.