மளமளவென குறைந்த பெட்ரோல் -டீசல் விலை..!

Published : Oct 08, 2019, 11:22 AM IST
மளமளவென குறைந்த பெட்ரோல் -டீசல் விலை..!

சுருக்கம்

இன்றும் பெட்ரோல் , டீசல் விலை குறைத்து  விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள்  மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  

தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை திடீரென  சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பி வருகின்றனர்.  ஒருநாள் அதிகமாகவும், மறு நாள் குறைவாகவும், சிலநாட்கள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது.

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன.

இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 18 காசுகள் குறைந்து  76 ரூபாய் 43 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து 11 காசுகள் குறைந்து 70 ரூபாய் 57 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை முறையே 18 , 11 பைசா குறைந்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஒரு வாரமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை சரிந்து வருவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

Union Budget 2026: வரி வருவாய் பகிர்வு ஏமாற்றமளிக்கிறது.. மத்திய அரசுக்கு ஷாக் கொடுத்த அன்புமணி..
பிப்ரவரி 1 முதல் ஃபாஸ்டேக் விதி மாற்றம்… வாகன ஓட்டிகளே உஷாரா கவனிங்க