power cut : கோடை கொதிக்குது; கரண்ட் இல்லாததால் மக்கள் திணறல்: அதிகரித்துவரும் மின்வெட்டுக்கு என்ன காரணம்?

power cut : கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் மின் பற்றாக்குறையால், மக்கள் அறிவிக்கப்படாத மின்வெட்டைச் சந்தித்து வருகிறார்கள். நாட்டில் 150க்கும் மேலான மின்உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி பற்றாக்குறை நிலவுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன

power cut  : India staring at power outage in multiple states amid coal crisis

கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் மின் பற்றாக்குறையால், மக்கள் அறிவிக்கப்படாத மின்வெட்டைச் சந்தித்து வருகிறார்கள். நாட்டில் 150க்கும் மேலான மின்உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி பற்றாக்குறை நிலவுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன

தேவை எவ்வளவு

Latest Videos

நாட்டில் ஒவ்வொரு மின்உற்பத்தி நிலையத்திலும் நிலக்கரி இருப்பு குறித்து  ஆய்வு செய்ய வேண்டிய பொறுப்பு மத்திய மின் ஆணையத்துக்கு இருக்கிறது. ஏறக்குறைய 173 மின் உற்பத்தி நிலையங்களை இந்த ஆணையம் கண்காணித்து வருகிறது. 

power cut  : India staring at power outage in multiple states amid coal crisis

இந்த மின் நிலையங்களில் ஏப்ரல் 21ம் தேதி நிலவரப்படி 2.193 கோடி டன் நிலக்கரி மட்டுமே கையிருப்பு இருக்கிறது. ஆனால், நோமுரா பொருளாதார ஆய்வுநிறுவனத்தின் அறிக்கையில் 173 மின் நிலையங்களுக்கும் சேர்த்து 6.632 கோடி டன் நிலக்கரி இருந்திருக்க வேண்டும் அதைவிடக் குறைவாகவே கையிருப்பு இருக்கிறது.

எவ்வளவு கையிருப்பு வேண்டும்

ஊடகங்களின் செய்தியின்படி, 2014ம் ஆண்டுக்குப்பின் நிலக்கரி இருப்பு இந்த அளவு குறைந்ததில்லை. மத்திய அரசின் நிலக்கரி கையிருப்பு விதிகளின்படி, ஒவ்வொரு அனல்மின் நிலையத்திலும் அடுத்த 24 நாட்களுக்கான நிலக்கரி கையிருப்பு இருக்க வேண்டும், ஆனால், தற்போது வெறும் 9 நாட்களுக்கான கையிருப்பு மட்டுமே இருக்கிறது.

மத்திய மின் ஆணையத்தின் அறிக்கையின்படி, நாட்டில் 150 அரசு மின்உற்பத்தி நிலையங்கள் உள்ளன, இதில் 81 மின்நிலையங்களில் நிலக்கரி கையிருப்பு மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கிறது. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் மின்தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2019ம் ஆண்டு 106.6 கோடி யூனிட்களாகவும், 2021ம் ஆண்டு 124.2 கோடி யூனிட்களாகவும் இருந்தது. இது  2022ம் ஆண்டில் 132 கோடி யூனிட்களாவ உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிலக்கரி பற்றாக்குறை இருப்பது உண்மைதான, அதைத் தடுத்திருக்கலாம். அதேசமயம் கோடை வெப்பம் முன்கூட்டியே கூடுதலாக இருப்பதால், வழக்கத்தைவிட மின்தேவை அதிகரித்துள்ளது. இதனால் சப்ளை-தேவைக்கு இடையே பெரிய இடைவெளி இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளது

நிலக்கரி பற்றாக்குறை
பஞ்சாப், உ.பி. மகாராஷ்டிரா, ஹரியானா, ஆந்திராவில் நிலக்கரி பற்றாக்குறை இருப்பதால் கடும் மின்பற்றாக்குறை நிலவுகிறது. நிலக்கரி பற்றாக்குறையைச் சரிசெய்யவும், மின்வெட்டைத் தீர்க்கவும் நிலக்கரியை இறக்குமதி செய்ய மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது.

தமிழகமும் திணறல்

தமிழகத்திலும் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுகிறது. வழக்கத்துக்கு மாறாக கோடை வெப்பம் கூடுதலாக இருப்பதால் இரவில் மின்தேவையும அதிகரித்துள்ளது. ஆனால், மாலை நேரத்தில் முன்அறிவிப்பு இல்லாதவகையில் சிலமணநேரம் மின்வெட்டு நிலவுகிறது. இதுகுறித்து அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சட்டப்பேரவையில் எழுப்பியபோது நிலக்கரி பற்றாக்குறையையே காரணாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்துக்கு தினசரி மின்உற்பத்திக்கு 72ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி தேவைப்படுகிறது. 

அதை தடையின்றி வழங்கிடவும்  பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அறிவிப்பில்லாத மின்வெட்டால் தேர்வு நேரத்தில் மாணவர்கள் படிக்க முடியாமல் சிரமப்படுகிறார்கள். கொரோனா பாதிப்பிலிருந்து சிறு,குறு நடுத்தர தொழில்கள் மீண்டுவரும்போது மின்வெட்டு பெரும் சுமையாக மாறும்

vuukle one pixel image
click me!
vuukle one pixel image