sri lanka economic crisis: சீனாவுக்கு செக்: பெட்ரோல், டீசல் வாங்க இலங்கைக்கு 50 கோடி டாலர் இந்தியா உதவி

By Pothy Raj  |  First Published Apr 23, 2022, 2:37 PM IST

sri lanka economic crisis : சீனாவுக்கு செக் வைக்கும் வகையில் இலங்கைக்கு உதவிகளை இந்தியா வாரி வழங்கி வருகிறது. இலங்கை அரசு  பெட்ரோல், டீசல் கொள்முதல் செய்வதற்காக கூடுதாக 50 கோடி டாலர் வழங்குவதாக இந்தியா தெரிவித்துள்ளது.


சீனாவுக்கு செக் வைக்கும் வகையில் இலங்கைக்கு உதவிகளை இந்தியா வாரி வழங்கி வருகிறது. இலங்கை அரசு  பெட்ரோல், டீசல் கொள்முதல் செய்வதற்காக கூடுதாக 50 கோடி டாலர் வழங்குவதாக இந்தியா தெரிவித்துள்ளது. இந்தத் தகவலை இலங்கை நிதிஅமைச்சர் அலி சாப்ரி உறுதி செய்துள்ளார்.

கடும் நிதிச்சிக்கல்

Latest Videos

undefined

இலங்கை அரசு கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. இலங்கை அரசியம் அந்நியச் செலாவணி கையிருப்பு மோசமாகக் குறைந்துவிட்டதால், வெளிநாடுகளில் இருந்து உணவுப் பொருட்கள், மருந்துகள், பெட்ரோல், டீசல் ஆகியவற்றை இறக்குமதி செய்ய முடியாத நிலையில் இருக்கிறது. 

இலங்கை அரசு பொருளதாரத்தை தவறாகக் கையாண்டதைக் கண்டித்து தினசரி மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இலங்கையில் உணவுப் பொருட்கள் பற்றாக்குறை, பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டால் விலைவாசி விண்ணைமுட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. வெளிநாடுகளுக்கு தரவேண்டிய கடன் தொகையையும் இப்போதுள்ள நிலையில் தரஇயலாது என்று இலங்கை அரசு வெளிப்படையாக அறிவித்துவிட்டது.

உதவி

தற்போது எதிர்கொண்டுவரும் நிதிநெருக்கடியைச் சமாளிக்கவும், அதிலிருந்து வெளிவரவும் 400 கோடி டாலர் உடனடியா இலங்கைக்குத் தேவை. இதற்காக சர்வதேச நிதியம், உலக வங்கியிடம் உதவி கேட்டு இலங்கை அரசுப் பிரதிநிதிகள் அமெரிக்கா சென்றுள்ளனர்.

இலங்கைக்கு ஏற்கெனவே ஏராளமான உதவிகளை இந்தியா செய்துள்ளது. 100 கோடி டாலர் கடனுதவி, 50 கோடிக்கு உணவுப் பொருட்கள், மருந்துகள், எரிபொருள் ஆகியவற்றை வழங்குவதாக உறுதியளித்துள்ளது. சீனாவிடமும் இலங்கை அரசு உதவிகள் கோரியிருந்தாலும் இதுவரை சீனா உறுதியளித்தாக தகவல் ஏதுமில்லை. 

சீனாவுக்கு செக்

கடந்த சில ஆண்டுகளாக சீனாவுடன் இலங்கை அரசு நெருக்கம் காட்டி வந்தபோதிலும்கூட கடினமான நேரத்தில் இலங்கைக்கு உதவவில்லை. இதைப் பயன்படுத்தி இலங்கையுடன் மேலும் நெருக்கத்தை வளர்க்க இந்தியா விரும்புகிறது. இதன் மூலம் சீனா இலங்கையுடன் நெருங்கி வருவது தடுக்கப்படும்.இதற்காக கூடுதலாக 50 கோடி டாலர்களை வழங்க இந்தியா இலங்கையிடம் உறுதியளித்துள்ளது.

இந்தியா உறுதி

இதுகுறித்து இ்லங்கை நிதி அமைச்சர் அலி சாப்ரி நேற்று கூறுகையில் “ இலங்கை அரசு சர்வதேச நிதியத்திடம் நிதியுதவி கோரியுள்ளது. அந்த நிதியுதவி வந்து சேர்வதற்கு சிறிது காலமாகலாம். ஆதலால் எரிபொருள் தட்டுப்பாட்டைத் தீர்க்க 50 கோடி அளவுக்கு இந்தியாவிடம் கடனுதவி கேட்டிருந்தோம். அதை வழங்க இந்தியாவும் சம்மதித்துள்ளது.

அந்நிய முதலீடு

இது தவிர கூடுதலாக 100 கோடி டாலர் கடனுதவியும் இந்தியாவிடம் கோரியுள்ளோம். அடுத்த 9 மாதங்கள் இலங்கைக்கு கடினமான காலம். பல்வேறு நாடுகளில் இருந்து முதலீட்டை கொண்டுவருவது அவசியமாகும் இது தொடர்பாக பல்வேறு நாடுகளிடம் பேசி வருகிறோம். இந்த முயற்சி வெற்றிகரமாக முடிந்தால், 200 கோடி டாலர் அளவுக்கு முதலீடு இலங்கைக்கு வரும், இலங்கை ரூபாய் சரிவடைவதிலிருந்து தடுக்க முடியும் ” எனத் தெரிவித்தார்

இதுவரை இலங்கை அரசுக்கு 150 கோடிக்கு கடனுதவியை இந்தியா வழங்கியுள்ளது. அடுத்ததாக மேலும் 150 கோடிக்கு கடனுதவியை வழங்க இருக்கிறது குறிப்பிடத்தக்கது.  இது தவிர 40 கோடிக்கு டாலருக்கு கரன்ஸி ஸ்வாப்பிங்கையும் வழங்க கடந்த ஜனவரி மாதம் இலங்கைக்கு இந்தியா உறுதியளித்திருந்தது 
 

click me!