pm narendra modi :40ஆயிரம் கோடி டாலர்: இதுவரை இல்லாத அளவுக்கு இந்தியா ஏற்றுமதி: பிரதமர் மோடி பாராட்டு

Published : Mar 23, 2022, 01:48 PM IST
pm  narendra modi :40ஆயிரம் கோடி டாலர்: இதுவரை இல்லாத அளவுக்கு இந்தியா ஏற்றுமதி: பிரதமர் மோடி பாராட்டு

சுருக்கம்

pm  narendra modi :இந்தியா இதுவரை இல்லாத அளவாக 40ஆயிரம் கோடி டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்து ஆத்மநிர்பார் பாரத் திட்டத்தன் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது என்று பிரதமர் மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

இந்தியா இதுவரை இல்லாத அளவாக 40ஆயிரம் கோடி டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்து ஆத்மநிர்பார் பாரத் திட்டத்தன் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது என்று பிரதமர் மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

ஆத்மநிர்பார் பாரத்

நடப்பு நிதியாண்டுக்குள் மத்தியஅரசின் ஆத்மநிர்பார் பாரத் திட்டத்தின் மூலம் 40ஆயிரம் கோடி டாலர் அளவுக்கு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இலக்கு வைத்திருந்தது. இந்த இலக்குதேதி வரும் 31ம் தேதியுடன் முடிய இருக்கும் இருக்கும்நிலையில் அதற்கு முன்பாகவே 40ஆயிரம் கோடி டாலரை எட்டிவிட்டது.

40ஆயிரம் கோடி டாலர்

இதுகுறித்து பிரதமர் மோடி ட்விட்டரில் பாராட்டுத் தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்ட பாராட்டுச் செய்தியில் “ பொருட்கள், சேவைகள் ஏற்றுமதியில் இந்த ஆண்டு 40ஆயிரம் கோடிக்கு ஏற்றுமதி செய்ய மிகப்பெரிய இலக்கை இந்தியா வகுத்திருந்தது. அந்த இலக்கை இதுவரை இல்லாமல் முதல்முறையாக இந்தியா எட்டி சாதனை படைத்துள்ளது.

 இந்த சாதனையை படைக்க காரணமாக இருந்த விவசாயிகள், நெசவாளர்கள், சிறு,குறு,நடுத்தர தொழில்கள், உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகள். ஆத்மநிர்பார் பாரத் பயனத்தின் முக்கியமான மைல்கல் இதுவாகும்” எனத்தெரிவித்துள்ளார். #லோக்கல்கோஸ்குளோபல் எனும் ஹேஸ்டேக்கையும் பதிவிட்டுள்ளார்.

பியஷ் கோயல்

கடந்த மாதம் மக்களவையில் கேள்வி நேரத்தின்போது வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பதில் அளிக்கையில் “ தொடர்ந்து 10-வது மாதமாக , ஏப்ரல்2021 முதல் 2022 ஜனவரி வரை, இந்தியா 30ஆயிரம் கோடி டாலருக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இது மிகப்பெரிய சாதனை. நாம் ஏற்கெனவே 3340 கோடி டாலருக்குஏற்றுமதி செய்துவிட்டோம். இந்த நிதியாண்டுக்குள் 40ஆயிரம் கோடி டாலரை எட்டுவோம்” எனத் தெரிவித்திருந்தார்

2021, டிசம்பர் மாதம் இந்தியா 3700 கோடி டாலருக்கு ஏற்றுமதி செய்தது. இது எந்த மாதத்திலும் இல்லாத அளவு அதிகமாகும். கடந்த 2020ம் ஆண்டு டிசம்பரைவிட 37 சதவீதம் ஏற்றுமதி 2021, டிசம்பரில் இருந்தது. கடந்த 2021 டிசம்பரில் மட்டும் 3729 கோடி டாலருக்கு ஏற்றுமதி நடந்தது. கடந்த 2020ம் ஆண்டு டிசம்பரில் 2722 கோடி டாலருக்குதான் ஏற்றுமதி இருந்தது

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

தங்க கடனில் புதிய விதிகள்.. ஆர்பிஐயின் அதிரடி மாற்றம்.. மக்களே நோட் பண்ணுங்க
அரசு ஊழியர்கள் வயிற்றில் பாலை வார்த்த மத்திய அரசு.. 1 கோடி குடும்பங்கள் நிம்மதி.!