Breaking: ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனத் தலைவர் பவான் முன்ஜல் இல்லம், அலுவலகங்கலில் ஐடி ரெய்டு

Published : Mar 23, 2022, 12:18 PM ISTUpdated : Mar 23, 2022, 12:29 PM IST
Breaking: ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனத் தலைவர் பவான் முன்ஜல் இல்லம், அலுவலகங்கலில் ஐடி ரெய்டு

சுருக்கம்

Breaking : ஹீரோ மோட்டார்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பவான் முன்ஜல் இல்லம், அலுவலகம் ஆகிய இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்

ஹீரோ மோட்டார்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பவான் முன்ஜல் இல்லம், அலுவலகம் ஆகிய இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்

வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரின்அடிப்படையில் இந்த சோதனை நடந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பவான் முன்ஜலுக்குச் சொந்தமான டெல்லி, கிருகிராம் உள்ளிட்ட 25 இடங்களில் இன்று காலை முதல் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வடஇந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் இந்த சோதனை நடந்து வருகிறது. எத்தனை இடங்களில்  சோதனை நடக்கிறது என்பதை கூற வருமானவரித்துறை அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனம் மற்றும் மூத்தஅதிகாரிகள் சிலர் வரி ஏய்ப்பு செய்வதாக வருவாய் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்த சோதனை நடப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இது ரெய்டு குறித்து எந்தத் தகவலையும் கூற ஹீரோ நிறுவனம் மறுத்துவிட்டது. ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்கா என 40க்கும் மேற்பட்ட நாடுகளில் பவான் முன்ஜால் கிளைகளை உருவாக்கியுள்ளார். சர்வதேச தரத்தில் 8 உற்பத்தி மையங்களை ஹீரோ மோட்டார்ஸ் வைத்துள்ளது. இதில் இந்தியாவில் 6 உற்பத்தி மையங்களும், வங்கதேசம், கொலம்பியாவில் ஒரு உற்பத்தி மையமும் உள்ளது.உள்நாட்டு இருசக்கர வாகனச் சந்தையில் 50சதவீத பங்குகளை ஹீரோ நிறுவனம் வைத்துள்ளது.
 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

வீடு, கார், தனிநபர் கடன்களில் இஎம்ஐ குறையுது.. ரிசர்வ் வங்கியின் பரிசு.. எவ்வளவு குறையும்?
கடன் வாங்கியவர்களுக்கு குட் நியூஸ்.. ரெப்போ விகிதம் 5.25% ஆக குறைப்பு.. அதிரடி முடிவு