பிள்ளைகள் கல்யாணத்துக்கு பிஎஃப் பணம் எடுக்க விரும்புவோர் 7 வருட கணக்குடன் 50% வரை எடுக்கலாம். ஆனால், சில முக்கியமான நிபந்தனைகள் மற்றும் தகுதிகள் உள்ளன. கல்யாணம் மற்றும் படிப்பு போன்ற செலவுகளுக்கு மூன்று முறை மட்டுமே பிஎஃப் பணம் எடுக்க முடியும்.
பிள்ளைகள் கல்யாணத்துக்கு பிஎஃப்ல இருந்து பணம் எடுக்கறதுக்கான விதிகள் என்னன்னு தெரிஞ்சுக்கோங்க. 7 வருஷமான பிஎஃப் கணக்கில் இருந்து 50% வரை எடுக்கலாம். ஆனா ஒரு சில முக்கியமான கண்டிஷன்களும் இருக்கிறது.
Withdraw PF money for a child's marriage: பணியில் இருப்பவர்களுக்கு பிஎஃப் தான் அவர்களின் சேமிப்பாக இருக்கிறது. அவசரத்துக்கு இந்தப் பணம் மிகவும் உதவியாக இருக்கும். குறிப்பாக மருத்துவச் செலவு, பிள்ளைகள் படிப்பு, கல்யாணம்னு வரும்போது. உங்க பிள்ளைகள் கல்யாணத்துக்கு பிஎஃப் பணம் எடுக்கணும்னா, ஒரு சில விதிகள் இருக்கு. பணம் எடுக்கறதுக்கு ஒரு முக்கியமான கண்டிஷனையும் பூர்த்தி செய்யணும்.
பிள்ளைகள் கல்யாணத்துக்கு எவ்வளவு பணம் எடுக்கலாம்?
பணி செய்கிறவர்களின் அண்ணன், தம்பி, அக்கா, தங்கச்சி இல்லன்னா பிள்ளைகள் கல்யாணத்துக்கு அவசரத்திற்கு பிஎஃப் அக்கவுண்ட்ல இருந்து பணம் எடுக்கலாம். இபிஎஃப்ஓ விதிப்படி, பிஎஃப் கணக்கில் வட்டி சேர்ந்து மொத்தமா இருக்குற பணத்துல 50% எடுக்கலாம். ஆனா, அதுக்கு ஒரு முக்கியமான கண்டிஷன் இருக்கு. பிஎஃப் அக்கவுண்ட் தொடங்கி 7 வருஷம் ஆகியிருக்கணும்.
கல்யாணம்-படிப்புக்கு 3 தடவை மட்டும்தான் பணம் எடுக்க முடியும்:
கல்யாணம், படிப்பு மாதிரி செலவுகளுக்கு 3 தடவை மட்டும்தான் பணம் எடுக்க முடியும். இதுக்கு ஆன்லைன்ல விண்ணப்பிக்கலாம். ஆன்லைன்ல பணம் எடுக்க இபிஎஃப்ஓ வெப்சைட்ல லாகின் செய்யணும். ஆன்லைன்ல பணம் எடுக்கறதுக்கு உங்க ஆதார் கார்டை பிஎஃப் கணக்குடன் இணைக்கப்பட்டிருக்கணும். யுஏஎன் நம்பரும் ஆக்டிவ்வா இருக்கணும். அப்போதான் பணம் எடுக்க முடியும்.
PF பயனர்களுக்கு குட்நியூஸ்! இனி KYC க்கு HR ஐப் பார்க்க வேண்டிய அவசியமில்லை!
ஒவ்வொரு மாசமும் எவ்வளவு பிஎஃப் பணம் போகுது
பிஎஃப் கணக்கில் ஒவ்வொரு ஊழியருடைய அடிப்படைச் சம்பளத்துல 12% பங்கு சேரும். முதலாளி தரப்புல, ஊழியர் சம்பளத்துல பிடிக்கிற பணத்துல 8.33% இபிஎஸ்லயும் (ஊழியர் ஓய்வூதியத் திட்டம்), 3.67% இபிஎஃப்லயும் போகுது. பிஎஃப் பணம் ஒவ்வொரு மாசமும் சேரும், ஆனா வட்டி வருஷத்துக்கு ஒரு தடவைதான் கிடைக்கும்.
பணியை இழந்தால் பிஎஃப் பணம் எடுக்கலாமா?
இதுதவிர ஒருவர் 54 வயதுக்குப் பிறகு EPF இருப்பில் இருந்து 90% திரும்பப் பெறலாம். ஒருவர் வேலையை விட்டு வெளியேறிய பிறகு, ஒருவர் 1 மாதம் வேலையில்லாமல் இருந்தால், பிஎஃப் கணக்கில் இருந்து 75% பணத்தையும், இரண்டாவது மாதம் வேலையில்லாமல் இருந்தால் மீதமுள்ள 25% பணத்தையும் திரும்பப் பெறலாம்.
உறுப்பினர் ஓய்வு பெறும் போது 10 ஆண்டுகள் பணி செய்து முடிக்கவில்லை என்றால் அவர் தனது EPF உடன் முழு EPS தொகையையும் திரும்பப் பெறலாம். 10 ஆண்டுகள் பணியை முடித்திருந்தால், பணியாளருக்கு ஓய்வுக்குப் பிறகு ஓய்வூதிய சலுகைகள் கிடைக்கும்.
ஓய்வு பெற்ற பிறகு EPF கணக்கில் திரட்டப்பட்ட பணத்திற்கு முற்றிலும் வரி விலக்கு உண்டு. ஆனால், ஓய்வு பெற்ற பிறகு EPF-ல் பணத்தின் மீதான வட்டிக்கு வரி விதிக்கப்படும்.
வேலை மாறியவர்கள் கவனத்திற்கு.. பிஎஃப் பணத்தை வீட்டில் இருந்தே மாற்றுவது எப்படி?