petrol price today: அட நம்புங்க! ஒருலிட்டர் பெட்ரோல் ஒரு ரூபாய்: மகாராஷ்டிராவில் விற்பனை: அலைமோதிய மக்கள்

By Pothy RajFirst Published Apr 15, 2022, 11:03 AM IST
Highlights

petrol price today : நாட்டில் பெட்ரோல், டீசல் விலை லி்ட்டர் 100 ரூபாய்க்கும் மேல் அதிகரித்துள்ள நிலையில், மகாராஷ்டிராவில் ஒரு லி்ட்டர் பெட்ரோல் ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

நாட்டில் பெட்ரோல், டீசல் விலை லி்ட்டர் 100 ரூபாய்க்கும் மேல் அதிகரித்துள்ள நிலையில், மகாராஷ்டிராவில் ஒரு லி்ட்டர் பெட்ரோல் ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த பெட்ரோலை வாங்குவதற்காக மக்கள் கூட்டம் அலைமோதியதையடுத்து, போலீஸார் வரவழைக்கப்பட்டு கூட்டம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

லிட்டருக்கு ரூ10 உயர்வு

கடந்த நவம்பர் மாதத்திலிருந்து பெட்ரோல், டீசல் விலையை 5 மாநிலத் தேர்தல் காரணமாக எண்ணெய்நிறுவனங்கள் உயர்த்தாமல் இருந்தன. கடந்தமாதம் 21ம் தேதி தொடர் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தின.  இதுவரை பெட்ரோல், டீசலில் லிட்டருக்கு ரூ.10க்கும் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஒரு லிட்டர் ஒரு ரூபாய்

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.120வரை உயர்ந்துவிட்டதால் நடுத்தரக குடும்பத்தைச் சேர்ந்த மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். இந்நிலையில் அந்த மக்களுக்கு மிகப்பெரிய நம்மதி அளிக்கும் வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சோலாப்பூரில் நேற்று ஒருநாள் மட்டும் பெட்ரோல் லிட்டர் ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஏப்ரல் 14ம் தேதியான நேற்று டாக்டர் அம்பேத்கர் பிறந்ததினமாகும். இந்த தினத்தையொட்டி சோலாப்பூரில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் முதலில் வரும் 500 நபர்களுக்கு பெட்ரோல் ஒரு லிட்டர் ஒரு ரூபாய்க்கு விற்கப்பட்டது.

மக்கள் கூட்டம்

இந்தத் தகவலை அறிந்ததும் ஏராளமான மக்கள் பெட்ரோல் பங்க் முன்பு திரண்டுவிட்டனர். இதையடுத்து, போலீஸார் விரைந்துவந்து மக்கள் அனைவரையும் வரிசைப்படுத்தி நிற்கவைத்து பெட்ரோல் வாங்க வழி செய்தனர்.

மக்களுக்கு நிம்மதி

டாக்டர் அம்பேத்கர் மாணவர்கள் இளைஞர்கள் பேரவை சார்பில் பெட்ரோல் ஒரு லிட்டர் ஒரு ரூபாய்க்கு வழங்கப்பட்டது. இதுகுறித்து மாநிலத் தலைவர் மகேஷ் சர்வகோடா கூறுகையில்  “ நாட்டில் பணவீக்கம், விலைவாசி உயர்வு கடுமையாக அதிகரித்துவிட்டது. மோடியின் ஆட்சியில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.120 வரை உயர்ந்துவிட்டது.

இந்த விலைவாசி உயர்விலிருந்து மக்களுக்கு சிறிது விடுதலை அளிக்கும் வகையில், டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் அன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ஒரு ரூபாய்க்கு வழங்க முடிவு செய்தோம். அதன்படி முதலில் வரும் 500 பேருக்கு மட்டும் பெட்ரோல் ஒருலிட்டர் ஒரு ரூபாய்க்கு வழங்கப்பட்டது. ஒரு சிறிய அமைப்பால்500 லிட்டர் பெட்ரோல் ஒரு ரூபாய்க்கு வழங்கி மக்களுக்கு நம்மதி அளிக்கும் போது, மத்தியஅரசும் மக்களுக்கு ஏதாவது செய்து நம்மிதியளிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்

ஒரு ரூபாய்க்கு ஒருலிட்டர் பெட்ரோல் வாங்கிய ஒருவர் கூறுகையில் “ ஒரு ரூபாய்க்கு பெட்ரோல் வாங்கியது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. தினம்தினம் விலைவாசி உயர்ந்துவரும் இந்த நேரத்தில் சிறிது பணத்தை என்னால் சேமிக்க முடிந்தது” எனத் தெரிவித்தார்
 

click me!