petrol price today: இந்தியாவில் 5% மட்டும்தான் பெட்ரோல் விலை உயர்ந்தது : ஹர்தீப் பூரி விளக்கம்

Published : Mar 15, 2022, 02:46 PM IST
petrol price today: இந்தியாவில் 5% மட்டும்தான் பெட்ரோல் விலை உயர்ந்தது : ஹர்தீப் பூரி விளக்கம்

சுருக்கம்

petrol price today: பெருந்தொற்று காலத்தில் அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன், ஸ்பெயின் நாடுகளில் பெட்ரோல் விலை 50 முதல் 58 சதவீதம் வரை உயர்ந்துள்ளது, ஆனால், இந்தியாவில் பெட்ரோல் விலை 5 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்திப் சிங் பூரி தெரிவித்தார்.

பெருந்தொற்று காலத்தில் அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன், ஸ்பெயின் நாடுகளில் பெட்ரோல் விலை 50 முதல் 58 சதவீதம் வரை உயர்ந்துள்ளது, ஆனால், இந்தியாவில் பெட்ரோல் விலை 5 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்திப் சிங் பூரி தெரிவித்தார்.

58% விலை உயர்வு

மக்களவையில் மத்திய பெட்ரோலியம் மற்றும்இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்திப் சிங் பூரி நேற்று கேள்வி நேரத்தில் பதில் அளித்துப் பேசியதாவது:

கொரோனா பெருந்தொற்று காலத்தில்  அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன், ஸ்பெயின் நாடுகளில் பெட்ரோல் விலை 50 முதல் 58 சதவீதம் வரை உயர்ந்துள்ளது, ஆனால், இந்தியாவில் பெட்ரோல் விலை 5 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது. இந்த அவையில் இருக்கும் மக்கள் பிரதிநிதிகள் இந்த உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும். கடந்த 2020 ஏப்ரல் முதல் 2021, மார்ச் 31ம் தேதிவரை மக்கள் பெட்ரோலுக்கு கொடுத்தவிலை நிலையாகவே இருந்தது.

பெட்ரோல், டீசலுக்கான உற்பத்தி வரி உயர்வு, குறைப்பு என்பது அந்த சூழல், நேரகாலத்தைப்பொறுத்து அமைகிறது. பெருந்தொற்று காலத்தில் உற்பத்தி வரியை உயர்த்தினோம், அதன்பின்பு குறைத்துவிட்டோம்.

9 மாநிலங்கள் 

மத்திய அரசு உற்பத்தி வரியைக் குறைத்துவிட்டது. பெட்ரோல், டீசல் உற்பத்தி விலையைக் குறைத்துவிட்டோம். மற்ற நடவடிக்கைகளையும் எடுத்துவிலையைக் கட்டுப்படுத்த தயராக இருக்கிறோம் ஆனால், கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா, தெலங்கானா உள்பட 9 மாநிலங்கள் வாட் வரியைக் குறைக்கவில்லை.

பேச்சுவார்த்தை

தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வழங்குவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இது குறித்து ரஷ்ய அதிகாரிகளுடன் இந்திய அதிகாரிகள் பேசி வருகிறார்கள். ரஷ்யா உக்ரைன் இடையே போர் நடந்து வருவதால், பேச்சு தொடர்ந்து நடத்துவதிலும் தாமதம் ஏற்படுகிறது. பேச்சு வெற்றிகரமாக முடிந்தால், அவையில் தெரிவிப்பேன்.

பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் உரிமை எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டதிலிருந்து அதை மத்திய அரசு கட்டுப்பாடுத்தாது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். 

உற்பத்தி வரி

கடைசியாக கடந்த 2021,நவம்பர் 4ம்  தேதி பெட்ரோலுக்கு லிட்டர் ரூ.5, டீசலில் லிட்டர் ரூ.10 உற்பத்தி வரி குறைக்கப்பட்டது. அதன்பின் விலை மாற்றப்படாமல் இருக்கிறது. பொருளாதார வளர்ச்சியை அதிகப்படுத்த வேண்டும், விலைவாசியைக் கட்டுப்படுத்த வேண்டும், பணவீக்கத்தை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் என்ற முயற்சியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு ஆதரவாக பலமாநிலங்களில் பெட்ரோல், டீசல் வாட் வரி குறைக்கப்பட்டது. சில மாநிலங்களில் குறைக்கப்படவில்லை.

வரி வசூல்

கடந்த 3 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரி 2018-19ம் ஆண்டில் ரூ.2.14 லட்சம் கோடி, 2019-20ம் ஆண்டில் ரூ.2.23 லட்சம் கோடி, 2020-21ம் ஆண்டில் ரூ.3.73 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை ரூ.1.71 லட்சம் கோடி வசூலாகியுள்ளது

இவ்வாறு ஹர்திப் சிங் பூரி தெரிவித்தார்

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

அரசு ஊழியர்கள் வயிற்றில் பாலை வார்த்த மத்திய அரசு.. 1 கோடி குடும்பங்கள் நிம்மதி.!
அனில் அம்பானிக்கு அதிர்ச்சி.! அமலாக்கத்துறை எடுத்த அஸ்திரம்.. இடியாப்ப சிக்கலில் ரிலையன்ஸ் பவர்