
பெப்சிகோ இந்தியா நிறுவன தயாரிப்பான பெப்சி உள்ளிட்ட பல குளிர்பானங்களின் விற்பனை வெகுவாக குறைந்துள்ளது . இதனை ஈடுகட்டும் பொருட்டு, இதற்கு மாற்று பொருளாக உடனடி டிபன் தயாரிக்கும் முறையில் இட்லி, தோசை, உப்புமா மற்றும் சிச்சடி வகைகளை “க்வாக்கர் ஓட்ஸ்” என்ற பெயரில் தற்போது விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது பெப்சிகோ நிறுவனம் .
மேலும்,டிராபிகானா குளிர்பானங்கள் நல்ல லாபத்தை ஈட்டி தரும் தருவாயில், புதிய குளிர்பானம் ஒன்றையும் அறிமுகம் செய்துள்ளது.இது போன்று புதியதாக விற்பனைக்கு விடப்பட்டுள்ள இந்த குளிர்பானங்கள் மற்றும் க்வாக்கர் ஓட்ஸ் உள்ளிடவற்றை இந்த நிறுவனத்தின் ஊட்டச் சத்து பிரிவு துணைத் தலைவர் தீபீகா வாரியார் நேற்று அறிமுகம் செய்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது
மக்களிடேயே குளிர்பானங்கள் குறித்த நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால், தற்போது குளிர்பானங்களின் விற்பனை வெகுவாக குறைந்துள்ளது. பெப்சிகோ நிறுவனத்தின் பெப்சி உள்ளிட்ட பல குளிர் பானங்களின் விற்பனை குறைந்துள்ள நிலையில், க்வாக்கர் ஓட்ஸ் என்ற பெயரில் தங்களுடைய விற்பனையை அதிகரிக்க வியூகம் வகுத்துள்ளது பெப்சிகோ நிறுவனம்
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.