
ஜப்பானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பனாசோனிக், இந்தியாவின் உள்நாட்டு உபயோக சாதனங்கள் சந்தையில் உச்சத்தில் இருந்தது. வாடிக்கையாளர்களுக்கு தரமான பொருட்களை வழங்கி தரம் ஒன்றையே தாரக மந்திரமாக கொண்டு விளங்கிய பானாசோனிக் தற்போது சரிவு பாதையில் சென்று கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது. பல ஆண்டுகளாக நீடித்த போட்டி மற்றும் வர்த்தகத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக இந்நிறுவனம் தனது ரெஃப்ரிஜிரேட்டர் மற்றும் வாஷிங் மெஷின் வணிகத்தை முழுமையாக நிறுத்துவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
புதிய மாடல்கள் அறிமுகம்
இந்த தீர்மானம் பலருக்கு அதிர்ச்சி அளித்தது. ஏனெனில் பனாசோனிக் இந்தியாவில் டெலிவிஷன், குளிர்பதன சாதனங்கள், வாஷிங் மெஷின் உள்ளிட்ட பரந்த வரம்பில் தனது தயாரிப்புகளை விற்பனை செய்துவருகிறது. குறிப்பாக, இந்திய குடும்பங்களின் தேவைகள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப புதிய மாடல்களை அறிமுகப்படுத்தி, தனது பங்குகளை உயர்த்த முயற்சி செய்தது.
வலுவான போட்டி
அந்த வகையில், பனாசோனிக் தனது ரெஃப்ரிஜிரேட்டர் தயாரிப்புகளை இந்திய சந்தையில் பல்வேறு அளவிலும் வண்ணங்களிலும் விற்பனை செய்தது. அதேபோல், அத்துடன் தன்னிச்சையான துவைக்கும் திறன் கொண்ட வாஷிங் மெஷின்களும் வெளியிடப்பட்டன. ஆனாலும், LG, சாம்சங், வirlpool, Godrej போன்ற நிறுவனங்களின் வலுவான பங்கு மற்றும் நம்பிக்கை ஆகியவை பனாசோனிக் வளர்ச்சிக்கு இடையூறாக அமைந்தன.
சரிவடைந்த விற்பனை
இந்தியாவில் நுகர்வோர் பழக்கங்கள் மற்றும் விலைவேறு நிலைகளுக்கு ஏற்ப தயார் செய்த மாடல்கள் கூட, எதிர்பார்த்த வர்த்தக வளர்ச்சியை தரவில்லை. இதனால் பனாசோனிக்குக்கு வருடந்தோறும் நஷ்டங்களே மிச்சமாயின. கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு புது தயாரிப்புகளை அறிமுகம் செய்தும், விற்பனை தளங்களை விரிவாக்கியும் சந்தை பங்கில் கணிசமான உயர்வு ஏற்படவில்லை.
ரெஃப்ரிஜிரேட்டர், வாஷிங் மெஷின் வியாபாரத்தை மூட முடிவு
இதன் காரணமாக நிறுவனம், அதிகபட்ச கவனத்தை இலாபகரமான பிரிவுகள் மீது செலுத்தும் நோக்கில், ரெஃப்ரிஜிரேட்டர் மற்றும் வாஷிங் மெஷின் வியாபாரத்தை மூட முடிவு செய்துள்ளது. இதனுடன், இந்த பிரிவுகளில் இருக்கும் மீதமுள்ள பங்கு, பராமரிப்பு மற்றும் சேவைகள், ஏற்கனவே வாங்கியுள்ள நுகர்வோருக்கு தொடர்ச்சியாக வழங்கப்படும் என்று பனாசோனிக் தெரிவித்துள்ளது.
நிதியை மற்ற துறைகளுக்கு மாற்ற திட்டம்
அதிகாரப்பூர்வ அறிக்கையில், “இந்தியாவில் நாங்கள் பல துறைகளில் வலுவாக வளர்ந்து கொண்டிருக்கின்றோம். குறிப்பாக எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் எலக்ட்ரீக்கல் தொழில்நுட்பங்களில் புதிய முதலீடுகளை செய்ய திட்டமிட்டுள்ளோம். ஆனால், ரெஃப்ரிஜிரேட்டர் மற்றும் வாஷிங் மெஷின் பிரிவுகள் நாங்கள் எதிர்பார்த்த இலாபத்தை எட்ட முடியாத நிலையில் உள்ளன. எனவே, இவற்றை நிறுத்தி, எங்கள் வளங்களை மற்ற பிரிவுகளுக்கு திருப்பி செலுத்துகிறோம்” என கூறப்பட்டுள்ளது.
“முடிவல்ல, மிண்டும் எழும்”
இந்த முடிவால், பனாசோனிக் வியாபாரம் பாதிக்கப்படும் என சிலர் கருதினாலும், பெரும்பாலான வல்லுநர்கள், இந்நிறுவனம் தன்னுடைய வலுவான பங்குகளான டெலிவிஷன், ப்ரெமியம் ஹோம் அப்ளையன்ஸ் மற்றும் எனர்ஜி செயல்திறன் கொண்ட தயாரிப்புகளில் மேலும் முதலீடு செய்து, வளர்ச்சி பாய்ச்சலுக்கு ஏற்படுத்தும் என எதிர்பார்க்கின்றனர்.
இந்தியாவில் தற்போது, பனாசோனிக் ஏர்கண்டிஷனர்கள், ஸ்மார்ட் டிவி, மைக்ரோவேவ் அவன், பேட்டரி தொழில்நுட்பம் உள்ளிட்ட பல தயாரிப்புகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. வருங்காலத்தில் இந்திய சந்தைக்கு தேவையான புதிய தயாரிப்புகளை சீராக அறிமுகப்படுத்தும் திட்டங்களை நிறுவனம் தீட்டியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இத்தகைய மாற்றங்கள் இந்திய உள்நாட்டு சாதனங்கள் சந்தையில் புதிய போட்டியை உருவாக்கக்கூடும் என்பதோடு, மற்ற நிறுவனங்களுக்கான வாய்ப்புகளையும் அதிகரிக்கும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.