OPPO A3s leak reveals big battery dual cameras and notched display
ஓப்போ நிறுவனம், அதன் புதிய தயாரிப்பான ஏ3எஸ் ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் இன்னும் சில நாட்களில் அறிமுகம் செய்ய உள்ளதால், இப்போதே ஸ்மார்ட்போன் பிரியர்கள் எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டனர். சீனாவை சேர்ந்த ஓப்போ நிறுவனம் அண்மையில் ஏ3 என்ற பட்ஜெட் ஸ்மார்ட்போனை சீன சந்தையில் அறிமுகம் செய்தது. இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், அதனை சற்று மேம்படுத்தி இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளதாக, ஓப்போ நிறுவன வட்டாரம் குறிப்பிடுகிறது.ஓப்போ ஏ3எஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படும் இந்த ஸ்மார்ட்போனின் தொடக்க விலை ரூ.10,990 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிவப்பு மற்றும் ஊதா ஆகிய 2 நிறங்களில், இந்த ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்படும் என்று கூறப்படுகிறது. ஏ3எஸ் ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் : 6.2 இன்ச் ஹெச்டி ப்ளஸ் தொடுதிரை வசதி. 1,520 x 720 பிக்சல் வசதி. 19:9 சூப்பர் முழு நீள தொடுதிரை. 1.8 ஜிகா ஹெர்ட்ஸ் ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 450 இயங்குதிறன்.2 விதமான ரேம் வசதியில் கிடைக்கப் பெறுகிறது. ஒன்று 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி சேமிப்புத் திறன் கொண்டதாகவும், மற்றொன்று 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்புத் திறன் கொண்டதாகவும் இருக்கும், ஆன்ட்ராய்ட் 8.1 ஓரியோ மென்பொருள். கலர் ஓஎஸ் 5.1. பின்புறத்தில் எல்ஈடி வசதியுடன் கூடிய 13 மெகா பிக்சல் மற்றும் 2 மெகா பிக்சல் திறன் உள்ள இரட்டை கேமிரா. 8மெகா பிக்சல் திறன் உள்ள செல்ஃபி கேமிரா. AI வசதியில் துல்லியமாக வீடியோ எடுக்கவும், புகைப்படம் எடுக்கவும் தகுந்த வகையில், வடிவமைக்கப்பட்டுள்ளது.4,230 எம்ஏஹெச் பேட்டரி. 4ஜி வோல்ட், வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ்/ஏ ஜிபிஎஸ், மைக்ரோ யுஎஸ்பி, 3.5 மிமி ஹெட்போன் ஜாக். உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் உலகிலேயே மிகப்பெரிய செல்போன் தயாரிப்பு ஆலையை இன்றுதான் சாம்சங் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக விரிவாக்கம் செய்துள்ளதால், அந்த நிறுவன செல்போன்கள் விலை குறையும் என்று எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த நேரத்தில் பட்ஜெட் ஸ்மார்ட்போனை ஓப்போ அறிமுகம் செய்துள்ளதால், சாம்சங் நிறுவனம் கடுப்பில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.