லண்டன் பங்குச் சந்தையில் இருந்து விரட்டப்பட்ட ஸ்டெர்லைட்டின்  வேதாந்தா குழுமம்…. பிரிட்டன் கடும் எதிர்ப்பு….

First Published Jul 4, 2018, 12:28 PM IST
Highlights
vedantha group companies leave from London share market


பிரிட்டன் தொழிலாளர் கட்சியின் கடும் எதிர்ப்பை அடுத்து ஸ்டெலைட்  அலையின் உரிமையாளரின் வேதாந்தா  குழுமம் லண்டன் பங்கு வர்த்தக சந்தையில் இருந்து விரட்டப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் இயங்கிவந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி  100 நாக்ளுக்கு மேல் போராட்டம் நடைபெற்றது. நூறாவது நாளில் நடந்த முற்றுகைப் போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

அன்று நடந்த போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர்.  நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் கை, கால்களை இழந்தனர். இதனை அடுத்து, ஆலையை மூட தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. மேலும்  துப்பாக்கி சூடு குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த  அரசாணைக்கு எதிரான ஸ்டெர்லைட் ஆலையின் உரிமையாளர் அனில் அகர்வாலின் வேதாந்தா குழுமம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

இதற்கிடையே, லண்டனில் உள்ள அனில் அகர்வாலின் வீட்டு முன்னர் அங்குள்ள தமிழர்கள் போராட்டம் நடத்தினர்.  இந்தப் போராட்டத்துக்கு பிரிட்டனின் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி ஆதரவு அளித்தது.

மேலும் அந்தக் கட்சியின் எம்.பி.க்கள் குழு வேதாந்தா குழும நிறுவனங்கள் குறித்து ஆய்வு செய்தது. அதில் பெரும்பாலான தொழிற்சாலைகளுக்கு பொது மக்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்து வருவது தெரிய வந்தது. இதையடுத்து பிரிட்டன்  தொழிலாளர் கட்சியும்  வேதாந்தா நிறுவனத்தை நீக்க வேண்டும் என லண்டன் பங்குச்சந்தைக்கு அழுத்தம் கொடுத்து வந்தது.

இந்நிலையில்,  வேதாந்தா குழுமம் லண்டன் பங்குச்சந்தையில் இருந்து தற்போது நீக்கப்பட்டுள்ளது. அதே, நேரத்தில் அந்நிறுவனத்தின் பங்குகளை வோல்கன் டிரஸ்ட்  நிறுவனம் வாங்குவதற்கு முயற்சி செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.. 

click me!