வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்னும் 6 நாட்கள் மட்டுமே அவகாசம்..!

By Thiraviaraj RMFirst Published Sep 24, 2020, 11:55 AM IST
Highlights

ஆண்டுக்கு இரண்டரை லட்சம் ரூபாய் உச்சவரம்பை தாண்டும் அனைவரும், வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.

2018-2019ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலஅவகாசம் மார்ச் 31ஆம் தேதி முடிவடைந்த நிலையில், கொரோனா காரணமாக ஜூலை 31ஆம் தேதி வரை முதலில் நீட்டிக்கப்பட்டது. பின்னர் செப்டம்பர் 30ஆம் தேதி வரை மீண்டும் நீட்டிக்கப்பட்டது.

கால அவகாசம் நீட்டிக்கப்படாத நிலையில், செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். ஆண்டுக்கு இரண்டரை லட்சம் ரூபாய் உச்சவரம்பை தாண்டும் அனைவரும், வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.

வரி ஆதாய நடவடிக்கைகளால், வருமானவரி உச்ச வரம்புக்கு கீழ் வந்தாலும், கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்பது 2018ஆம் ஆண்டு முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அபராதம் செலுத்தி, கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், கொரோனாவால் செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டது. இதையும் தவறவிட்டால், வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாததற்காக வருமானவரித் துறையின் நடவடிக்கைகளுக்கு ஆளாக நேரிடும்.

click me!