
இனி RTGS NEFTபணபரிமாற்றத்திற்கு கட்டணம் இல்லை... ரிசர்வ் வங்கி அதிரடி முடிவு ..!
பாஜக மத்தியில் ஆட்சி அமைத்தவுடன் கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது. அதாவது ஆன்லைன் பண பரிமாற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருந்தது.
அதன்படியே பெரும்பாலான மக்கள் அவரவர் வங்கிக் கணக்கிலிருந்து RTGS NEFT உள்ளிட்டவற்றின் மூலமாகவும், ஒருசில செயல்கள் மூலமாகவும் பண பரிமாற்றத்தை மிக எளிதாக செய்து வந்தனர், இந்த நிலையில் இவ்வாறு செய்யப்படும் பண பரிமாற்றத்திற்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.
இதற்கிடையில் RTGS NEFT உள்ளிட்டவற்றின் மூலமாக மேற்கொள்ளப்படும் பண பரிவர்த்தனைக்கு வசூலிக்கப்படும் கட்டணம் இனி இருக்காது என ரிசர்வ் வங்கி அதிரடி முடிவு எடுத்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இது தவிர்த்து ஏடிஎம் கட்டணத்தையும் குறைக்க அதற்கான தனி குழு அமைத்து ஆலோசனை செய்து வருவதாகவும் தெரிவித்து உள்ளது ரிசர்வ் வங்கி.
இந்த செய்தி ஆன்லைன் பரிவர்த்தனை மேற்கொள்பவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.