ola electric: குட்பை! 2025ம் ஆண்டு இறுதியில் இந்தியாவில் பெட்ரோல் டூவீலர் இருக்காது! Olaவின் புதிய திட்டம்

Published : Jun 20, 2022, 11:44 AM IST
ola electric: குட்பை! 2025ம் ஆண்டு இறுதியில் இந்தியாவில் பெட்ரோல் டூவீலர் இருக்காது! Olaவின் புதிய திட்டம்

சுருக்கம்

ola electric :2025ம் ஆண்டு இறுதியில் இந்தியாவில் பெட்ரோலில் ஒடும் இரு சக்கரவாகனங்களே இருக்காது என்று ஒலா நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பாவேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

2025ம் ஆண்டில் இந்தியாவில் பெட்ரோலில் ஒடும் இரு சக்கரவாகனங்களே இருக்காது என்று ஒலா நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பாவேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் காலணி தொழிற்சாலை, கோயில்கள், பேக்கரிகள், தென் மரங்கள் ஆகியவற்றுக்கு மத்தியில் ஓலா நிறுவனம் தன்னுடைய ப்யூச்சர் தொழிற்சாலையை அமைத்துள்ளது. உலகிலேயே அதிகமான பெண்கள் பணியாற்றும் தொழிற்சாலையாகவும் ஓலா நிறுவனம் இருக்கிறது. 

தன்னுடைய தடத்தை பரவலாக்கிவரும் ஓலா நிறுவனம் ஆண்டுக்கு ஒரு கோடி வாகனங்கள் தயாரிக்கவும், உலகிலேயே ஒவ்வொரு 7 சக்கரவாகனங்களில் ஒன்றாக ஓலா இருக்கவும் திட்டமிட்டுள்ளது.

ஓலா நிறுவனத்தின் ப்யூச்சர் தொழிற்சாலை ஏறக்குறைய 500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. ஏறக்குறைய 300 ரோபோக்கள் மூலம் வாகனத் தாயாரிப்பு நடக்கிறது. செயற்கை நுண்ணறிவு மூலம்தான் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன. வாகனங்களை வடிவமைத்தல், பெயின்டிங், வெல்டிங், மோட்டர் அசெம்பிள் அனைத்தும் தானியங்கி ரோபாக்கள்தான் செய்கின்றன.

ஓலா நிறுவனத்தின் எதிர்காலத் திட்டம் குறித்து நிறுவனத்தின் நிறுவனர் பாவேஷ்அகர்வால் கூறியதாவது: 
கொரோனா பரவல் காலத்தில் 7 மாதங்களில் இந்த தொழிற்சாலை கட்டப்பட்டது. தற்போதைய நிலவரப்படி தினசரி 1000 பேட்டரி ஸ்கூட்டர்களை தயாரிக்கிறோம். 2ஆயிரத்துக்கும் அதிகமான பெண் ஊழியர்கள் இருக்கிறார்கள். இந்த பெண் ஊழியர்கள் அனைவரும் சிறப்பாகப் பயற்சி பெற்றவர்கள், வாகனத்தை அசெம்பிள் செய்யவும் கற்றவர்கள். எதிர்காலத்தில் 10ஆயிரம் பெண்களை இங்கு வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளோம்.

தற்போது ஓலாஎஸ்1 ப்ரோ வாகனம் மட்டும் தயாரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் மற்ற ஸ்கூட்டர்களுக்கான தயாரிப்பும் நடக்கும்.

அடுத்த இரு ஆண்டுகளில் எங்கள் தொழிற்சாலையிலிருந்து ஏராளமான பேட்டர் ஸ்கூட்டர்கள் தயாராகி வெளியேறும். விரைவில் நாங்கள் பேட்டரி காரையும் தயாரிக்க இருக்கிறோம். நிச்சயம் பெரிய அளவிலான செடான் காராகத்தான் இருக்கும், சிறிய வகையான காராக இருக்காது.

நாங்கள் பேட்டரி கார்கள், இரு சக்கரவாகனங்களுக்கான தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறோம். 2025ம் ஆண்டு இறுதியில் இந்தியாவில் பெட்ரோலில் ஓடும் இரு சக்கரவாகனங்கள் இருக்காது என நம்புகிறேன். 

இந்தியாவின் பேட்டரி வாகனங்கள் தயாரிப்பு இலக்கிற்கு என்னுடைய திட்டமும் உதவும். இது தவிர எலான் மஸ்க்கின் டெஸ்லா, அமெரிக்க, சீன நிறுவனங்களும் வரலாம். இந்தியா பேட்டரி வாகனங்களை நோக்கி நகர்ந்து வருகிறது. எதிர்காலத்தில் மக்கள் பெட்ரோலில் வாகனங்களை ஒதுக்கிவிட்டு, பேட்டரி வாகனங்களுக்கு மாறுவார்கள்.

எங்கள் நிறுவனத்தின் மீது சில தவறான விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. அவை விரைவில் மாறும், பேட்டரி தீப்பிடித்தல் குறித்து எங்களின் ஆய்வுக்குழு பணியாற்றி வருகிறது. அது விரைவில் சரிசெய்யப்பட்டு முழுமையான வாகனம் வெளியாகும்” இவ்வாறு அகர்வால் தெரிவித்தார்


 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

வீடு, கார், தனிநபர் கடன்களில் இஎம்ஐ குறையுது.. ரிசர்வ் வங்கியின் பரிசு.. எவ்வளவு குறையும்?
கடன் வாங்கியவர்களுக்கு குட் நியூஸ்.. ரெப்போ விகிதம் 5.25% ஆக குறைப்பு.. அதிரடி முடிவு