
நொய்டா சர்வதேச விமான நிலையம் அக்டோபர் 2025-ல் செயல்பாட்டுக்கு வர உள்ளது. இந்த விமான நிலையத்தின் முதல் கட்டத்திற்கு ரூ.7,209 கோடி செலவிடப்பட்டுள்ளது. வருடத்திற்கு 1.2 கோடி பயணிகளை சுமக்கும் திறன் கொண்டதாக உள்ளது. அடுத்தடுத்த கட்டங்களில் 7 கோடி பயணிகள் வரை பயன்படுத்தும் வகையில் விரிவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பயணிகளுக்கு கூடுதல் செலவு
விமானத்தில் பயணம் செய்ய நினைப்பவர்களுக்கு சிறிது கூடுதல் சுமை உள்ளது. ஏர்போர்ட் ரெகுலேட்டரி ஆத்தாரிட்டி (AERA) “பயனர் மேம்பாட்டுக் கட்டணம் (UDF)” என்ற புதிய கட்டணத்தை அறிவித்துள்ளது. அதன்படி, உங்கள் டிக்கெட் விலைக்கு கூடுதலாக ரூ.210 முதல் ரூ.980 வரை கட்டணம் செலுத்த வேண்டும்.
எவ்வளவு கட்டணம்?
புதிய இடைக்கால கட்டணப்படி:
இந்த கட்டணங்கள் மார்ச் 31, 2026 வரை அல்லது புதிய அறிவிப்பு வரும் வரை அமலில் இருக்கும்.
எத்தனை பயணிகள் பயன்படுத்துவர்?
முதற்கட்ட ஆண்டுகளில் 94% பயணிகள் உள்நாட்டு விமான பயணிகளாக இருப்பார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. 2025-26 நிதியாண்டில் சுமார் 57 லட்சம் உள்நாட்டு பயணிகள் மற்றும் 2.4 லட்சம் சர்வதேச பயணிகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2030-க்குள் இது 1.7 கோடி உள்நாட்டு மற்றும் 10 லட்சம் சர்வதேச பயணிகளாக அதிகரிக்கலாம்.
உலகின் பெரிய விமான நிலையம்
உத்தரப் பிரதேச அரசு, நொய்டா சர்வதேச விமான நிலையத்தை உலகின் மிகப்பெரிய விமானம் நிலையங்களில் ஒன்றாக மாற்ற திட்டமிட்டுள்ளது. பல டெர்மினல்கள், ரன்வேகள் மற்றும் நவீன வசதிகள் இங்கு அமைக்கப்படவுள்ளன. தற்போது, இந்தியாவின் மிக பிஸியான விமான நிலையமாக டெல்லி IGI 10 கோடி பயணிகளை கையாள்கிறது. விரைவில், நொய்டா விமான நிலையம் NCR பகுதியின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமாக பல நகரங்களுக்கு சேவை செய்ய உள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.