பூமி திருத்தி உண்... நாடாளுமன்றத்தில் தமிழில் அறிவுறுத்திய நிர்மலா சீதாராமன்..!

By Thiraviaraj RMFirst Published Feb 1, 2020, 11:45 AM IST
Highlights

 அவ்வையார் பாடிய ஆத்திசூடியில் வரும் பூமி திருத்தி உண். அதாவது விளைநிலங்களை உழுது பயிர் செய்து உண் என்கிற பாடலை மேற்கோள் காட்டி பேசினார். 

பாராளுமன்றத்தில் கடந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டை தாக்கல் உரையில் நிர்மலா சீதாராமன் வரி விதிப்பு முறை குறித்தும் வரி வசூல் குறித்து  புறநானூற்றில் பிசிராந்தையார் பாடிய ‘யானை புக்க புலம் போல’என்ற பாடலை மேற்கோள் காட்டி விளக்கம் அளித்தார். 

‘காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே
மாநிறை வில்லதும் பன்னாட் காகும்
நூறுசெறு வாயினும் தமித்துப் புக்கு உணினே
வாய் புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும்
அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே
கோடி யாத்து நாடு பெரிது நந்தும்
மெல்லியன் கிழவனாகி வைகலும்
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு
பரிவு தப எடுக்கும் பிண்டம் நச்சின்
யானை புக்க புலம் போலத்
தானும் உண்ணான் உலகமும் கெடுமே’

“வயலில் விளைந்துள்ள நெற்கதிர்களை அறுத்து, நெல்மணிகளை பிரித்து அரிசியாக்கிப் பின் சோற்றுக் கவளமாக்கி யானைக்கு உண்ணத் தந்தால், ஒரு துண்டு நிலத்தில் விளையும் அரிசியும் கூட அந்த யானைக்குப் பலநாள் உணவாகும். அப்படிச் செய்யாமல் அந்த யானையையே வயலுக்குள் சென்று பயிரை மேயுமாறு விட்டுவிட்டால், அதன் வாய்க்குள் செல்லும் நெல்லை விட அதன் கால் பட்டுக் கசங்கும் கதிர்களே மிகுதியாக இருக்கும்.

அதேபோல வரித் திணிப்புச் செய்து, இரக்கமின்றித் தன் குடிமக்களைக் கசக்கிப் பிழிந்து வரிவசூல் செய்ய அரசன் முற்பட்டால், அந்த நாடு ‘யானை புக்க புலம்’போல அவனுக்கும் பயன் தராமல், மக்களும் பயன்கொள்ள வழியில்லாமல் சீர்கெடும்”என்பதுதான் அந்த பாடலின் விளக்கம்.  அதே போல் இந்தாண்டு ஏதாவாது தமிழில் பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் அவர் அவ்வையார் பாடிய ஆத்திசூடியில் வரும் பூமி திருத்தி உண். அதாவது விளைநிலங்களை உழுது பயிர் செய்து உண் என்கிற பாடலை மேற்கோள் காட்டி பேசினார். 

click me!