ஜி.எஸ்.டி.யால் குடும்பங்களில் சேமிப்பு அதிகரிப்பு... ஏப்ரலில் எளிமையாகிறது வரி கணக்கு தாக்கல் முறை...!

By Kanimozhi PannerselvamFirst Published Feb 1, 2020, 11:36 AM IST
Highlights

எளிமையான ஜிஎஸ்டி வரி கணக்கு தாக்கல் முறை வரும் ஏப்ரல் மாதம் முதல் அமல்படுத்தப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் நடப்பு நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல் தற்போது தொடங்கி நடந்து வருகிறது. இந்திய நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று காலை தொடங்கியது. இந்த நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இரண்டாவது முறையாக இன்று காலை பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். காலை 11 மணியளவில் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் தொடங்கியது. 

பட்ஜெட்டை வாசிக்கத் தொடங்கிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், மக்களின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் மத்திய பட்ஜெட் இருக்கும் என நம்பிக்கை அளித்தார். பட்ஜெட் தாக்கலில் முதலில் வாசிக்கப்பட்டது ஜி.எஸ்.டி. தான். நடப்பு ஜிஎஸ்டியை நாடு முழுவதும் அமல்படுத்தியது மோடி தலைமையிலான பாஜக அரசின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சாதனை என புகழ்ந்துரைத்தார்.மேலும் மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்கும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 


இந்தியாவின் பொருளாதாரத்தை ஒர்ங்கிணைக்கும் வகையில் ஜிஎஸ்யி வரி முறை செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், கடந்த 2 ஆண்டுகளில் 16 லட்சத்திற்கும் அதிகமான புதிய வரி செலுத்துபவர்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் ஜி.எஸ்.டி. அமலான பிறகு ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் 4 சதவீதம் அளவிற்கு அன்றாட செலவு குறைந்துள்ளதாகவும், அதனால் 4 சதவீத சேமிப்பு அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஜி.எஸ்.டி. வரி கணக்கு தாக்கல் செய்யும் முறை சிக்கலாக இருப்பதாக மக்கள் கருத்து தெரிவித்து வந்த நிலையில், எளிமையான ஜிஎஸ்டி வரி கணக்கு தாக்கல் முறை வரும் ஏப்ரல் மாதம் முதல் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்தார். கடந்த நிதியாண்டில் 40 கோடி ஜிஎஸ்டி வருமான வரிக் கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

click me!