உலகில் 5-வது பெரிய பொருளாதார நாடு இந்தியா... நிர்மலா சீதாராமன் பெருமிதம்..!

By vinoth kumarFirst Published Feb 1, 2020, 11:24 AM IST
Highlights

நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாத கடைசியில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. இதை பிப்ரவரி 1-ம் தேதிக்கு பாஜக தலைமையிலான மத்திய அரசு கடந்த 2017-ல் மாற்றியது. மத்திய பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட்டும் சேர்த்து தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2020-21-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று காலை 11 மணிக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். 

பொருளாதார வளர்ச்சி மந்தமாக உள்ள நெருக்கடியான கால கட்டத்தில் உலகில் 5-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாத கடைசியில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. இதை பிப்ரவரி 1-ம் தேதிக்கு பாஜக தலைமையிலான மத்திய அரசு கடந்த 2017-ல் மாற்றியது. மத்திய பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட்டும் சேர்த்து தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2020-21-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று காலை 11 மணிக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். 

இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் உரையாற்றி நிர்மலா சீதாராமன்;-  இந்திய பொருளாதாரத்தில் மீது மிகுந்த நம்பிக்கை ஏற்படும் வகையில் மோடி அரசு செயல்படுகிறது. சிறுபான்மையினர், பெண்கள் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் பட்ஜெட் அமையும். ஜிஎஸ்டி வரியால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதம் 4% செலவு குறைகிறது. கடந்த 2 ஆண்டுகளில் 15 லட்சம் புதிய வரிசெலுத்துவோர் உருவாகியுள்ளனர். ஏழைகள் நேரடியாக பன்பெறும் வகையில் ஏராளமான புதிய திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். 

மேலும், வரி கணக்கு செலுத்த வரும் ஏப்ரல் மாதம் முதல் எளிய முறை அறிமுகப்படுத்தப்படும் என நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். 40 கோடி வருமான வரி கணக்கு நாடு முழுவதும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போது உலகில் 5-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது என்றார். 

click me!