வருமான வரி அதிரடியாகக் குறைப்பு... இன்ப அதிர்ச்சி கொடுத்த நிர்மலா சீதாராமன்..!

By Thiraviaraj RMFirst Published Feb 1, 2020, 1:23 PM IST
Highlights

நேரடி வரிகள் குறித்து பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தனி நபர் வருமான வரி செலுத்தும் முறையை மேலும் எளிதாக்கி உள்ளதாக தெரிவித்தார்
 

நேரடி வரிகள் குறித்து பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தனி நபர் வருமான வரி செலுத்தும் முறையை மேலும் எளிதாக்கி உள்ளதாக தெரிவித்தார்.

5 லட்சத்திலிருந்து 7.5 லட்சம் வரை - 15 சதவிகிதமாக இருந்ததை 10 சதவிகிதமாக குறைத்துள்ளார். 7.5 லட்சத்திலிருந்து 10 லட்சம் வரை - 20 சதவிகிதமாக இருந்த வருமான வரியை 15 சதவிகிதமாக குறைந்து அறிவித்துள்ளார். 10 லட்சத்திலிருந்து 12.5 லட்சம் வரை - 25 சதவிகிதமாக இருந்த வருமான வரியை 20 சதவிகிதமாகவும், 12.5 லட்சம் முதல் 15 லட்சம் வரை 30 சதவிகிதமாக இருந்த வருமான வரியை 25 சதவிகிதமாகவும் குறித்து அறிவித்துள்ளார் நிமலா சீதாராமன். 15 லட்சத்துக்கு மேல் 30 சதவிகிதமாக அறிவித்துள்ளார். 

லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷனில் அரசு வசமுள்ள பங்குகளின் ஒரு பகுதியை விற்க முடிவெடித்திருப்பதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இதற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனத்தை எழுப்பினர். 20-21ல் ஜிடிபி வளர்ச்சி 10 சதவீதமாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது என்று பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.
 

click me!