ஒரு லட்சம் கிராமங்களுக்கு இன்டர்நெட்... பாரத் நெட் திட்டத்திற்கு 6 ஆயிரம் கோடி ஒதுக்கீடு...!

By Kanimozhi PannerselvamFirst Published Feb 1, 2020, 1:22 PM IST
Highlights

அதில், பாரத் நெட் திட்டத்துக்காக 6,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்றும், அந்த திட்டத்தின் மூலம் ஒரு லட்சம் கிராம பஞ்சாயத்துகளுக்கு இணைய சேவை வழங்கப்படும் என்றும் அறிவித்தார். 

2020-2021-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் அறிவிப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துவருகிறார். ஜி.எஸ்.டி, உள்கட்டமைப்பு, விவசாயத்துறை, எரிவாயுத்துறை உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டு வந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். 

அதன் தொடர்ச்சியாக, இணையச் சேவை தொடர்பான அறிவிப்புகளையும் வெளியிட்டார். அதில், பாரத் நெட் திட்டத்துக்காக 6,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்றும், அந்த திட்டத்தின் மூலம் ஒரு லட்சம் கிராம பஞ்சாயத்துகளுக்கு இணைய சேவை வழங்கப்படும் என்றும் அறிவித்தார். 

 நாடு முழுவதும் டேட்டா சென்டர் பார்க்குகளை உருவாக்க  தனியார் துறைக்கு ஊக்கமளிக்கும் புதிய கொள்கை விரைவில் கொண்டு வரப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். 

கிராம பஞ்சாயத்துக்கள் அளவிலுள்ள பொதுத்துறை அமைப்புகளுக்கு இணையதள வசதி அளிக்கப்படும் என்றும்,  குவாண்டம் தொழில்நுடப்பத்துக்காக அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 8,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

click me!