28,600 கோடியில் இந்திய பெண்களை மொத்தமாக வளைத்த நிர்மலா...!! தானிய லட்சுமி என வைத்த பயங்கர ஐஸ்...!!

By Ezhilarasan BabuFirst Published Feb 1, 2020, 1:17 PM IST
Highlights

பெண்களின் வளர்ச்சியே  நாட்டின் வளர்ச்சி என்ற அவர் , பெண்கள் நலனுக்காக அரசு ரூ.28,600 கோடி ஒதுக்கீயுள்ளது என்றார். தான்ய லக்‌ஷ்மி திட்டம்  விவசாயத்தில் பெண்களை ஈடுபடுத்தி ஊக்கப்படுத்தும் திட்டமாகும் என கூறினார்.  

விதை , தானியங்களைசேகரிக்கும் வகையில் கிராமப்புற பெண்களுக்கு தானிய லட்சுமி என்ற  சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில்  அறிவித்துள்ளார்,  மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இரண்டாவது முறையாக இன்று இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார் .  மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே நிர்மலா சீதாராமன் நிதிநிலை அறிக்கையை வாசிக்க தொடங்கினார்.  மக்களின் வருமானத்தை உயர்த்தி ,  வாங்கும் திறனை அதிகரிக்கச் செய்யும் பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் அமையும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர்  விவசாயம், ஊரக வளர்ச்சி, பாசனம் தொடர்பான திட்டங்களுக்கு ரூ.2. 83 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.  தொடர்ந்து அதேபோல் ,  மனிதக் கழிவை மனிதனே அகற்றக்கூடாது.  மனித கழிவை மனிதனே அகற்றுவதை தடுக்க திட்டம் வகுக்கப்பட்டு புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்,  பழங்குடியினர் நலனுக்கு இந்த பட்ஜெட்டில் 53 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்,  குறிப்பாக   தானியங்களைசேகரிக்கும் வகையில் கிராமப்புற பெண்களுக்கு தானிய லட்சுமி என்ற  சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என் அறிவித்தார். பெண்களின் வளர்ச்சியே  நாட்டின் வளர்ச்சி என்ற அவர் , பெண்கள் நலனுக்காக அரசு ரூ.28,600 கோடி ஒதுக்கீயுள்ளது என்றார். தான்ய லக்‌ஷ்மி திட்டம்  விவசாயத்தில் பெண்களை ஈடுபடுத்தி ஊக்கப்படுத்தும் திட்டமாகும் என கூறினார்.

 

தொடர்ந்து பேசிய அவர்,  தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் சிறப்பு வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அறிவித்தார்.   அப்போது தமிழக எம்பிக்கம் மேசையை தட்டி அவருக்கு வரவேற்பு அளித்தனர்.  ஆதிச்சநல்லூர் உட்பட நாடு முழுக்க 5 தொல்பொருள் தளங்கள் மேம்படுத்தப்படும் என்று அவர் அறிவித்தார்.   காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்த நடவடிக்கையின் கீழ் இந்தியா அர்ப்பணிப்புடன் செயல்படும் என்றார்.  2021 ஜனவரி 1 முதல் இதற்கான பணிகள் தொடங்கும்.  அதிக காற்று மாசு ஏற்படுத்தும் மின் உற்பத்தி நிலையங்கள் மூடப்படும் பின்னர்  அந்த நிலம் பிற நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் என்றார்,  அதேபோல்  மாநில அரசுகளுடன் இணைந்து சுற்றுச்சூழலை சீர்படுத்த ரூ .4,400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.  
 

click me!