தூத்துக்குடி மாவட்டத்துக்கு பாராளுமன்றத்தில் பெருமை சேர்த்த நிதி அமைச்சர்...!! அவையை அதிரவிட்ட பாஜக...!!

By Ezhilarasan BabuFirst Published Feb 1, 2020, 2:11 PM IST
Highlights

 உலக அளவில் சுற்றுலா துறையில் 64 ஆவது இடத்தில் இருந்த இந்தியா கடந்த ஐந்து ஆண்டுகளில் 34வது  இடத்திற்கு முன்னேறி உள்ளது .   இது கடந்த 5 ஆண்டுகளில்  இந்திய சுற்றுளாத்துறை  அடைந்த மிகப்பெரிய  வெற்றி  என்றார் 

தொல்லியல் துறை சார்பில் ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார், தமிழக மக்களின் சார்பில் நீண்ட நாடுகளாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்த நிலையில் பட்ஜெட்டில் இதை அறிவித்துள்ளார்.   மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இரண்டாவது முறையாக இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்து  வருகிறார் ,  மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே நிர்மலா சீதாராமன் நிதிநிலை அறிக்கையை வாசிக்கத் தொடங்கினார் .

 

இந்த பட்ஜெட் மக்களின் வருமானத்தை உயர்த்துவதுடன்,   வாங்கும் திறனை அதிகரிக்கச் செய்யும் பட்ஜெட் என அறிவித்த அவர் ,  விவசாயம் பெண்கள் பழங்குடியினர் ஆகியோரை  முன்னிலைப்படுத்தி பட்ஜெட்டை வாசித்தார் ,  தொடர்ந்து பேசிய அவர் தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் சிறப்பு வாய்ந்த அருங்காட்சியம் அமைக்கப்படும் என அறிவித்தார் .    உலக அளவில் சுற்றுலா துறையில் 64 ஆவது இடத்தில் இருந்த இந்தியா கடந்த ஐந்து ஆண்டுகளில் 34வது  இடத்திற்கு முன்னேறி உள்ளது .   இது கடந்த 5 ஆண்டுகளில்  இந்திய சுற்றுளாத்துறை அடைந்த மிகப்பெரிய  வெற்றி  என்றார் .

 

அதேபோல் சுற்றுலாத்துறையை மேம்படுத்த பல்வேறு முக்கியமான நகரங்களில் தேஜஸ் ரயில் மூலம் இணைக்கப்பட்டு சுற்றுலாத்துறை மேம்படுத்தப்பட்டுள்ளது அதற்காக சுமார் 2500 கோடி ரூபாய்  ஒதுக்கப்பட்டுள்ளது .  இந்நிலையில் தமிழகம் ,  ஹரியானா , உத்தரப் பிரதேசம் , குஜராத் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தொல்லியல் துறை சார்ந்த அருங்காட்சியகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது . இந்நிலையில் தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தின் தொல்லியல் சிறப்புமிக்க ஆதிச்சநல்லூரில் சிறப்புவாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் அறிவித்தார். 
 

click me!