பென்ஷன் வாங்கும் அரசு ஊழியர்கள் இதை கவனிச்சீங்களா? இனி இரண்டு அடுக்கு பாதுகாப்பு கட்டாயம்!

By SG BalanFirst Published Apr 3, 2024, 1:15 AM IST
Highlights

புதிய பாதுகாப்பு அம்சம் என்.பி.எஸ். வலைத்தளத்தில் மட்டுமின்றி பான் கார்டு, ஃபாஸ்டாக் (FASTag) போன்ற சேவைக்குள்ளும் இந்த ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வந்திருக்கிறது.

தேசிய ஓய்வூதிய அமைப்பில் (NPS) ஏப்ரல் மாதம் முதல் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) என்.பி.எஸ். இணையதளத்தில் உள்நுழைவு செய்வதற்கு புதிய பாதுகாப்பு விதியைக் கொண்டுவந்துள்ளது.

ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி, அனைத்து பயனர்களும் என்.பி.எஸ். தளத்தில் இரண்டு அடுக்கு பாதுகாப்பு முறையில்தான் லாக்-இன் செய்ய முடியும். இந்த இரண்டு அடுக்கு பாதுகாப்பு அம்சம் அங்கீகரிக்கப்படாத உள்நுழைவைத் தடுக்க உதவுகிறது. என்பிஎஸ் தளத்தில் மேற்கொள்ள பரிவர்த்தனைகளுக்கும் கூடுதல் பாதுகாப்பை வழங்கும்.

இந்த புதிய பாதுகாப்பு அம்சம் பான் கார்டு, ஃபாஸ்டாக் (FASTag) போன்ற சேவைக்குள்ளும் இந்த ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வந்திருக்கிறது.

ஹைபிரிட் வாகனங்களுக்கு ஜிஎஸ்ரி வரி குறைப்பு! அமைச்சர் நிதின் கட்காரி கொடுத்த சர்ப்ரைஸ் அப்டேட்!

ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைப்பதற்கான அவகாசமும் மார்ச் மாதத்துடன் முடிந்துவிட்ட நிலையில் இந்த புதிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இனி பான் மற்றும் ஆதார் எண்களை இணைக்க ரூ.1,000 அபராதத் தொகையுடன் இணைக்க வேண்டும்.

பல வாகனங்களுக்கு ஒரே FASTag ஐ பயன்படுத்துவது, ஒரு வாகனத்துக்கு பல FASTag களை இணைத்து பயன்படுத்துவது போன்றவற்றைத் தடுக்க இந்தப் புதிய பாதுகாப்பு அம்சம் உதவும் என்று கருதப்படுகிறது.

இதேபோல ஜிமெயில் சேவையிலும் ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து, ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் ஈமெயில்களை அனுப்புவோர் பல்க் செண்டராகக் கருதி கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளது. சப் டொமைன்களில் இருந்து அனுப்பும் ஈமெயில்களும் மெயின் டொமைன் அடிப்படையில் கணக்கிடப்பட்டும் என்றும் கூகுள் கூறியிருக்கிறது.

பிரச்சாரத்துக்கு மத்தியில் பெருமாள் கோயிலில் வழிபாடு நடத்திய திருமாவளவன்!

click me!