
தேசிய மருந்து விலை நிர்ணய அதிகாரசபை ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 800 மருந்துகளின் விலைகளை அதிகரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இதில் இரத்த அழுத்தம், தேன், வைட்டமின்கள், கொலஸ்ட்ரால், காய்ச்சல் மற்றும் சளிக்கான மருந்துகள் உள்ளடங்கும். இது தவிர, ஸ்டெராய்டுகள், ஆன்டிபயாடிக் மருந்துகள், வலி நிவாரணிகளின் விலையும் அதிகரித்து வருகிறது.
புதிய நிதியாண்டு முதல் மருந்துகளின் விலை உயர்த்தப்பட்டாலும், அது மிகவும் குறைவு ஆகும். குறித்த மருந்தின் விலை பழைய விலையை விட 0.0055 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மருந்து விலை உயர்வுடன் ஒப்பிடுகையில் இந்த விலை குறைவே.
முன்னதாக, 2022-2023ல் 10 சதவீதமும், 2023-24ல் 12 சதவீதமும் விலையை உயர்த்த சலுகைகள் வழங்கப்பட்டன. இதய மருந்து முதல் ஹீமோகுளோபின் வரை 800 உயிர்காக்கும் மருந்துகளின் விலை ஏப்ரல் 1ம் தேதி முதல் உயர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ரூ.55,000 தள்ளுபடியை அறிவித்த ஒகாயா.. மார்ச் 31 தான் கடைசி தேதி.. எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குங்க..
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.