nda 2 form: யுபிஎஸ்சி என்டிஏ, என்ஏ, சிடிஎஸ் பரிவுக்கான 400 இடங்களுக்கான அறிவிப்பு வெளியானது

By Pothy RajFirst Published May 18, 2022, 3:19 PM IST
Highlights

nda 2 form : nda 2 2022: nda  form: nda 2 form 2022: யுபிஎஸ்சி சார்பில் தேசிய பாதுகாப்பு அகாடெமி(என்டிஏ), கடற்படை(நாவல் அகாடெமி), விமானப்படை ஆகியவற்றில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் இன்று ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளன. விண்ணப்பங்களை upsconline.nic.in  என்ற இணையதளம் மூலம் அனுப்பலாம்.

யுபிஎஸ்சி சார்பில் தேசிய பாதுகாப்பு அகாடெமி(என்டிஏ), கடற்படை(நாவல் அகாடெமி), விமானப்படை ஆகியவற்றில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் இன்று ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளன. விண்ணப்பங்களை upsconline.nic.in  என்ற இணையதளம் மூலம் அனுப்பலாம்.

யுபிஎஸ்சி சார்பில் தேசிய பாதுகாப்பு அகாடெமி(என்டிஏ), தரைப்படை, கடற்படை(நாவல் அகாடெமி), விமானப்படை ஆகியவற்றுக்கு 150வது கோர்ஸ் பிரிவுக்கான விண்ணப்பங்கள் இன்று வெளியாகியுள்ளன. 2023ம் ஆண்டு ஜூலை2ம் தேதி முதல் 112வது இந்திய நாவல் அகாடெமி கோர்ஸ்(ஐஎன்ஏசி) தொடங்கும். 

இதில் சேர்வதற்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசித் தேதி வரும் ஜூன் 7ம் தேதியாகும். விண்ணப்பங்களை திரும்பப் பெறும் தேதி ஜூன் 14 ஆகும். விண்ணப்பங்களை சரியாக அனுப்பியவர்கள் வரும் செப்டம்பர் 4ம் தேதி நாடுமுழுவதும் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள் .

கல்வித் தகுதி: 

தரைப்படைக்கு சேர்வோர் 12ம் வகுப்பு அங்கீகரிக்கப்பட்ட பள்ளிக்கூடம் மாநில கல்வி வாரியத்துக்குள் உட்பட்ட பள்ளியில் முடித்திருக்க வேண்டும்.

விமானப்படை, கப்பற்படையில் சேர்வோர் 12ம்வகுப்பு மாநிலக் கல்வி வாரியத்துக்குள் உட்பட்ட அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் முடித்திருக்க வேண்டும். 12ம் வகுப்பில் இயற்பியல், கணிதம் கட்டாயமாகப் படித்திருக்கவேண்டும். 

வயது வரம்பு

இந்தப் பிரிவில் சேர்வதற்கு ஆண்கள், பெண்கள் இருவருக்கும் 2004 ஜனவரி 2ம் தேதிக்குமுன்பாக பிறந்திருக்கக் கூடாது. 2007 ஜனவரி 1ம் தேதிக்கு பின்பாக பிறந்திருக்க கூடாது. 15.7 வயது முதல் 18.7வயதுவரை இருக்க வேண்டும். விண்ணப்பிப்போர் திருமணம் செய்திருக்கக்கூடாது. 

இந்தியராக இருத்தல் வேண்டும். அல்லது நேபாளம், அல்லது பூடானைச் சேர்ந்தவராக இருக்கலாம். திபெத்தியிலிருந்து இந்தியாவுக்கு கடந்த 1962க்கு முன்பாக இந்தியா வந்தவர்கள் இதில் விண்ணப்பிக்கலாம். 

தேர்வு முறை

2 கட்டங்களாகத் தேர்வு நடக்கும். முதலில் 900 மதிப்பெண்களுக்கான எழுத்துத் தேர்வு. அதில் தேர்வானபின் எஸ்எஸ்பி நடத்தும் நேர்முகத் தேர்வில் வெல்ல வேண்டும். கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்
கணிதத்திலிருந்து 120 கேள்விகளும், அறிவியலில் இருந்து 150 கேள்விகளும் கேட்கப்படும். கணிதத்துக்கு 300 மதிப்பெண்களும,் அறிவியலுக்கு 600 மதிப்பெண்களும் வழங்கப்படும். தேர்வு 2.30 மணிநேரம் நடக்கும்.

எவ்வாறு விண்ணப்பிப்பது(UPSC NDA 2 Recruitment 2022)
1.    விண்ணப்பங்கள் இன்று(மே18) முதல் ஆன்லைனில் வெளியாகியுள்ளன. யுபிஎஸ்சியின் upsconline.nic.in என்ற தளத்தில் சென்று விண்ணப்பத்தை பதிவு செய்யலாம்.
2.    விவரங்களைக் குறிப்பிட்டு, என்ன பதவிக்கான விண்ணப்பம் என்பதை தெரிவிக்க வேண்டும்.
3.    பதிவு செய்தபின், விண்ணப்பத்தை நிரப்ப வேண்டும். 
4.    விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்கள், சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். 
5.    பதிவேற்றம் செய்தபின் சப்மிட் கொடுக்க வேண்டும்
6.    இதற்கான விண்ணப்பக்கக் கட்டணம் ரூ.100
7.    பட்டியல் வகுப்பினர், பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

எழுத்துத் தேர்வு
யுபிஎஸ்சி என்டிஏ-2 தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் ஜூன் 7ம் தேதி கடைசித் தேதியாகும். ஜூன் 14ம் தேதி விண்ணப்பத்தை திரும்பப் பெற கடைசித் தேதியாகும். ஆகஸ்ட் மாதம் அட்மிட் கார்டு தேர்வாளருக்கு கிடைக்கும். செப்டம்பர் 4ம் தேதி தேர்வும், அக்டோபர் அல்லது நவம்பரில் தேர்வு முடிவுகள் வெளியாகும்.

காலியிடம்:
என்டிஏ பிரிவில் தரைப்படைக்கு 10 பெண்கள் உள்பட 208காலியிடமும், கடற்படைக்கு 3 பெண்கள் உள்பட 42 காலியிடமும், 2 பெண்கள் உள்பட 92 காலியிடம் விமானப்படையிலும்(பைலட்) உள்ளன. இதில் தொழில்நுட்பப் பிரிவில் பெண்களுக்கு 18 இடங்கள், கிரவுண்ட் டூட்டியில் 2 பெண்கள் உள்பட 10 காலியிடமும் உள்ளன.

கடற்படை(நாவல்அகாடெமி)
கடற்படையில் 30 காலியிடங்கள் உள்ளன. இதற்கு ஆண்கள் மட்டுமே தகுதி. 

ஊதியம்
யுபிஎஸ்சி என்டிஏ-2  பிரிவில் பயிற்சிக்காக தகுதி பெறுவோருக்கு மாத ஊதியம்ரூ.56,100 வழங்கப்படும். லெப்டினென்ட் பதவிக்கு-(ரூ56,100-ரூ1.77லட்சம் வரை), இது தவிர கேப்டன், மேஜர் பதிவிக்கு வரும்போது அதிகபட்சமாக ரூ.2லட்சம் வரை ஊதியம் கிடைக்கும்.

click me!